வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 10
🔮♻️🔮♻️🔮♻️🔮♻️🔮♻️🔮
🍁 இன்றைய நித்தியக்கடன்
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍁 இன்றைய சாதகம்
🍁 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍁 இன்றைய நற்சிந்தனை
🍁 தினந்தோறும் உறங்குவதற்கு முன்பாக கட்டாயம் சாந்தி தவம் செய்ய வேண்டும். இந்த மண்ணுக்குரிய மையத்தில் தவம் செய்வதால் இந்த பூமிக்கும் நமக்குமான எதிர்மறையான தன்மைகள் சமப்படுத்தப் படுகின்றன, இணக்கத்தன்மை உருவாகிறது. மேலும் இந்த மண்ணில் இருந்துதான் இந்த உடலும் வளர்ந்திருக்கிறது. மண்ணில் உள்ள உலோகங்கள் ரசாயனங்கள், நம் உடலுக்குள்ளும் சத்துப் பொருட்களாக இருந்து இயங்கி வருகிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், பக்க பரிவு நரம்பு மண்டலத்தை சாந்தி தவம் ஊக்கப்படுத்துகிறது.
🍁 இன்றைய தற்சோதனை
🍁 அன்பு, கருணை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து, நாம் மீண்டும் மீண்டும் சம நிலைக்கு வருவதற்கு இந்த பக்க பரிவு நரம்பு மண்டலம், துரிதம் அடைந்தால் மட்டும் தான் முடியும். இந்த உணர்வுகளை கட்டுப்பாட்டு மையமாக பக்க பரிவு நரம்பு மண்டலம் இருக்கிறது. இந்த நரம்பு மண்டலம் சாந்தி தவம் செய்யும் போது ஊக்கம் அடைகின்றது. நிலையற்ற நம்முடைய மனத்தன்மையையும் உடல் தன்மையையும், நிலையான இயக்கத்ததிற்கு கொண்டு வருவதற்கு சாந்தி தவமே பேருதவியாக அமைகிறது.
🍁 இன்றைய பண்புப்பயிற்சி
🍁 உடல் சோர்வு மனச்சோர்வு இந்த இரண்டுக்குமான தீர்வு சாந்தி தவமே ஆகும். தயவுகூர்ந்து தினம்தோறும் உறங்குவதற்கு முன்பாக சாந்தி தவம் செய்து விடுங்கள். பகலில் நாம் நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக ஏற்படுத்திக் கொள்ளும் அணு அடுக்கு சீர் குழைவுகளை, சாந்தி தவத்தால் சமன் செய்து கொள்ளலாம். மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தில் அளவு முறையை கடைபிடித்து, நாம் அருள் பேராற்றலோடு இணைவதற்கு முயல்வோமாக. வாழ்க வளமுடன்...
🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment