வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 09
⛳💠⛳💠⛳💠⛳💠⛳💠⛳
🌌 இன்றைய நித்தியக்கடன்
🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌌 இன்றைய சாதகம்
🌌 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌌 இன்றைய நற்சிந்தனை
🌌 மனம் நின்று நிலைக்கவும் மனம் சிறப்பு நிலை அடையவும் மனதுக்கு இருக்கும் வாய்ப்பு உயிர். உயிர் மீது மனதை செலுத்தி பழக்க பழக்க மனம் உயிராகவே மாறி நிற்கும். அலை இயக்க நிலையில் இருக்கும் மனம் நிலை இயக்க தன்மைக்கு உயர்வு பெறும். இந்நிலை பேற்று தன்மையை உருவாக்குவதற்காகவே இம் மனிதப் பிறவி இப்பூமியில் உருவானது. இது பிறப்புக்கு உண்டான சிறப்பு செயலாகும். "செய்க தவம்! செய்க தற்சோதனை! செய்க தவம்!"
🌌 இன்றைய தற்சோதனை
🌌 துவக்க காலத்தில் தியானம் சரியாக பிடிபடாமல் போகலாம். போகப்போக பயிற்சியில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு மீண்டும், மீண்டும் முயற்சி செய்யும்போது, பலவிதமான சோதனைகளுக்கு அப்பால் ஆத்ம தரிசனம் கிட்டும். ஆத்ம தரிசனம் கிடைக்க வேண்டுமானால், அதற்கு நாம் உடல்ரீதியாக, மனரீதியாக, உயிர்ரீதியாக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவரையில் சோதனைகள் தொடரும். தற்சோதனை செய்து சோதனை யாவையும் சாதனையாய் மாற்றுவோம்.
🌌 இன்றைய பண்புப்பயிற்சி
🌌 சாதிக்க உருவான நாம் சோதனைகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது. எந்த ஒரு காலத்திலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை விட்டு பிரிந்து விடக்கூடாது. இவைகளுக்கும் நமக்கும் இடையே பிரிவை உருவாக்க நமக்குள்ளாகவே பலவிதமான சூழ்ச்சிகள், சூழ்நிலைகள் உருவாகும். அவை யாவையும் கடந்து பயிற்சியை விட்டு விலகாத பண்பில் உயர வேண்டும். பயிற்சி வேறு நாம் வேறு அல்ல என்ற அளவிற்கு பயிற்சியோடு பயிற்சியாகி வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment