நித்தியக்கடன் ஜனவரி 08 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 08


🔰💥🔰💥🔰💥🔰💥🔰💥🔰


🚥 இன்றைய நித்தியக்கடன்


🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🚥 இன்றைய சாதகம்


🚥 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🚥 இன்றைய நற்சிந்தனை


🚥 நம்முடைய எல்லா வகையான தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்கிறோம். இதில் ஒரு நீதியையும், நியாயத்தையும் கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கும் போது அது பாரபட்சமில்லாமல், நேர்மையோடு இருப்பது அவசியம். பொதுவாக ஒரு வார்த்தையை உலகில் பரவலாக உபயோகப்படுத்துகிறார்கள். என்னுடைய பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று, அப்படியெல்லாம் இறைவனிடத்தில் எதுவுமே கிடையாது.


🚥 இன்றைய தற்சோதனை


🚥 வாழ்க்கை என்றால் ஒரே வாழ்க்கைதான். விளைவு என்றால் செயலுக்கு தகுந்த விளைவு தான். மற்றவர்களுக்கும், நமக்கும் எந்த வகையிலும் சாதக பாதகங்கள் இல்லாமல் சிந்தித்து செயல் படுவதுதான் இறைநீதியாகும். நேர்மையாகவும், நியாயமாகவும் எந்த பாரபட்சமுமில்லாமல் நடுநிலையோடு செயல் படுவதற்காக இந்த மனித இனம் இப்பூமியில் உருவானது. நாம் வாழவேண்டிய முறையும் இது தான். நன்றாக தற்சோதனை செய்து எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நடுநிலையோடு வாழ்வோம்.


🚥 இன்றைய பண்புப்பயிற்சி


🚥 எவறொருவருக்காகவும் இறைநீதி என்பது ஒரு நாளும் ஒருபோதும் மாறவே மாறாது. செயலுக்குத் தக்க நீதியாக விளைவை தந்துகொண்டே இருக்கும். ஒருவருக்கு ஒருவர் செயல் ஒரே மாதிரியாக இருந்தாலும், விளைவு என்பது வேறுபடும். பல்வேறு காரணங்கள் ஒன்றுகூடி ஒரு விளைவை உருவாக்குகிறது. அதில் முக்கியமானது அவரவர்களுடைய கருமையத் தன்மை, வாழும் முறை, சமுதாயத்தில் அவருடைய பங்களிப்பு இவைகளையெல்லாம் பொருத்தே அவ்விளைவு அமைகிறது. இன்னமும் தெளிவாகச் சொன்னால் மனசாட்சியை மதித்து வாழ்வது. இப்பண்பைத்தான் இறைநிலை கணக்கிட்டு விளைவை தருகிறது. இதுவே இறை ஞானத்திற்குரியது இப்பண்பில் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...


🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments