வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 05
🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️
🎯 இன்றைய நித்தியக்கடன்
🎯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎯 இன்றைய சாதகம்
🎯 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎯 இன்றைய நற்சிந்தனை
🎯 மனிதர்களாக பிறந்திருக்கும் ஒவ்வொருவரும் இறைநிலையை உணர்வதற்கான அடிப்படை தகுதியுடன் தான் பிறக்கிறார்கள். இதில் மனிதர்களுக்கு மனிதர்கள் விகிதாசாரம் வேண்டுமானால் ஏற்றத்தாழ்வுடன் இருக்கலாம். மற்றபடி அனைவரும் அதற்கான தகுதியோடு தான் பிறந்திருக்கிறோம். இந்த சூழ்நிலையில் நம்முடைய கடமை என்ன என்பதை சிந்தித்துப் பார்த்தால், இந்த தகுதியை வளர்த்துக் கொள்வந்து ஒன்றே ஆகும். படிப்படியாக உடலாலும், மனதாலும், உயிராலும், பண்புகளாலும் உயர்வு பெற வேண்டும்.
🎯 இன்றைய தற்சோதனை
🎯 நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவை இல்லாததை எல்லாம் தேவை ஆக்கிக்கொண்டு, வாழ்க்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள கூடாது. இந்த தேவைகளை முறைப்படுத்தும் மிகச்சிறந்த பண்பில் நாம் உயரும்போது, அதுவே நம்மை இறைவனுக்கு அருகாமையில் அழைத்துச் செல்கிறது. கர்மவினைப் பதிவுகள் நம்மை மீண்டும் மீண்டும் பின்னடைவுகளை சந்திக்க சூழ்நிலைகளை உருவாக்கலாம். நாம் தெளிவாக இருந்தால் தான் அவைகளை எல்லாம் சரியாக எதிர்கொள்ள முடியும்.
🎯 இன்றைய பண்புப்பயிற்சி
🎯 உடல் செல்களில் இருக்கக்கூடிய நோய் தன்மையை தினந்தோறும் உடற்பயிற்சி செய்து போக்கிக் கொள்ளலாம். உயிரின் மீது இருக்கக்கூடிய கலகங்களை காயகல்பம் பயிற்சி செய்து போக்கிக் கொள்ளலாம். மேலும் கருமையம், உயிர்துகள்கள், உடல் செல்கள் மூன்றிலும் இருக்கக்கூடிய கலகங்களை தவம் தற்சோதனை பயிற்சிகளில், நம்மை ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு எதிர்மறையான கர்மவினை பதிவுகளிலிருந்து நாம் பாதுகாப்பு பெறலாம். எது எப்படியானாலும் இரண்டொழுக்க பண்பாட்டினை வாழ்க்கையாய் வாழ்வதில் இருந்து விலகி விடக்கூடாது. வாழ்க வளமுடன்...
🎯 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment