வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 02
🏮🌼🏮🌼🏮🌼🏮🌼🏮🌼🏮
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 மனதினுடைய மறுமுனையில் இறைநிலையே இருப்பாக இருந்து கொண்டிருக்கிறது. இறைநிலையை விட்டு பிரிந்து புறத்தில் புலன்கள் வழியாக விரிந்து இயங்கக்கூடிய மனதை மீண்டும் உடற்பயிற்சி, காயகல்பம், தற்சோதனை, தவம் இந்த நான்கு விதமான பயிற்சிகள் மூலம் இறை நிலையை நோக்கி திருப்புவதற்கான முழுமையாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணப்பொழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த முயற்சிக்கு ஒரு நாள் நிச்சயமாக வெற்றி கிட்டும்.
🎱 இன்றைய தற்சோதனை
🎱 இந்த முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னதாக, நாம் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கக்கூடிய விலங்கினப் பதிவுகள் நம்மை தடுத்து நிறுத்தி பலவகையிலும் திசை திருப்பலாம். நம் வைராக்கியத்தை நிலை குலைக்கும் வண்ணம் பலவகையான சூழ்நிலைகளும் உருவாகும். எது எப்படியானாலும் நாம் விடாமுயற்சியோடும் வைராக்கியத்தோடும் இருந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
🎱 இன்றைய பண்புப்பயிற்சி
🎱 103 மூலகங்களில் (elements) இருந்து வெளிவரக்கூடிய காந்தம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மைகளை உடையது. நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் போது அதற்குத் தக்க தன்மையுடைய காந்தத் தோடு இணைவோம். இந்த இறை தேடல் பயணமானது முழுக்கமுழுக்க காந்த வழி பயணம் ஆகும். சுத்த காந்த ஆற்றலோடு நாம் இணைய வேண்டுமானால் நம் எண்ணம், சொல், செயல் மூன்றும் தூய்மையானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆன்மீக வாழ்க்கை பயணத்தில் வெற்றி பெறுவோம். வாழ்க வளமுடன்...
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment