கடவுள் எப்படிப்பட்டவன் ?

 கடவுள் எப்படிப்பட்டவன் ?


கவியரசன் கண்ணதாசன் சொன்னது.  


🪷ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். 


🪷மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். 

அவன் தான் கடவுள்


🪷பூலோகத்தில் வாழும்போது  புகழையும் கொடுப்பான்.


🪷பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். 

அவன் தான் கடவுள்

     

🪷பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.


🪷அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.


🪷பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.

அவன் தான் கடவுள்

    

🪷கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். 

🪷அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். 

அவன் தான் கடவுள்

    

🪷ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான். 

🪷பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை  புலிக்கும் கொடுப்பான்.

அவன்தான் கடவுள்

    

🪷அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.


🪷அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான். 

அவன் தான் கடவுள்


🪷தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். 


🪷அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். 

அவன்தான் கடவுள்

    ‌ 

🪷நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். 

🪷அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். 

அவன் தான் கடவுள்

    

🪷புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். 

🪷தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். 

அவன் தான் கடவுள்


🪷கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். 

🪷தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். 

அவன் தான் கடவுள்

      

🪷மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். 

🪷சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். 

🪷பின்னிருந்து இயக்குவான். 

அவன் தான் கடவுள்

     

🪷தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.

🪷(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். 

*அவன் தான் கடவுள்

Comments