வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 30
💢🔰💢🔰💢🔰💢🔰💢🔰💢
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ இந்த இந்திய தேசம் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இந்திய நிலப்பரப்பின் கீழ் அமைந்து இருக்கக் கூடிய கனிம வளங்கள், மண்ணின் தன்மைகள், இதன் மேற்பரப்பில் இருக்கக்கூடிய பருவகாலங்கள், இங்கு இருக்கக்கூடிய மரம், செடி, கொடி, மூலிகை இவை அனைத்தும் இந்த தேசத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும் சிந்தனையை அறிவை வாழ்வின் வளங்களை ஊக்குவிக்கிறது. இந்த மண்ணில் பிறந்த நாம் அனைவரும் பாக்கியசாலிகள்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ மேலே சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் எவ்வாறு நன்மையே செய்கிறது என்பதை பற்றி தவத்தில் ஆழ்ந்து, ஆழ்நிலையில் விழிப்பு நிலையோடு இருந்து. தவத்தை நிறைவு செய்த பிறகும், இதே நிலையில் நிலைத்து இருந்து பழகுங்கள். இன்நிலையிலையே தற்சோதனை செய்யுங்கள். மீண்டும் மீண்டும் இவ்வாறு பயிற்சி செய்யும் போது, அது வாழ்வியலுக்கு முழுமையாக பயன் தரும்.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ சமுதாயத்திலும், தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், நடுநிலையோடு இருந்து சிந்தித்து செயலாற்றும் பண்பில் சிறந்து விளங்க வேண்டும். சார்புத் தன்மை இல்லாமல் நாம் சிந்தித்து செயல்படும் போது மட்டும்தான் நமக்குள் இருக்கக்கூடிய உயிரின் தன்மை உயிரோடு நமக்குள் நிறைவாக சுழலும் என்ற உண்மையை உணருங்கள். நடுநிலையோடு எண்ணம், சொல், செயல் இவைகளை வாழ்க்கைச் சூழ்நிலைகளில் தாராளமாக பயன்படுத்துங்கள். இந்த பண்பு ஐயமே இல்லாமல் நம்மை நமக்கு அடையாளப்படுத்த கூடியதாகும். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment