நித்தியக்கடன் டிசம்பர் 22 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 22


💢🎱💢🎱💢🎱💢🎱💢🎱💢


🔷 இன்றைய நித்தியக்கடன்


🔷 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔷 இன்றைய சாதகம்


🔷 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


🔷 இன்றைய நற்சிந்தனை


🔷 அவர் அவர்கள் அறிந்து வைத்திருக்க கூடிய தகவலை ஒட்டியே அவர் அவர்களுடைய வாழ்க்கை முறை என்பது அமைகிறது. இதிலிருந்து மீறியோ மாறியோ அவருடைய வாழ்க்கையும் அமையப் போவது இல்லை நமக்கு என்ன தெரியும் இன்னும் நாம் எதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தன்னார்வம் கொண்டு அவரவர்கள் தகவமைத்து கொள்ளும்படியாக இயற்கை என்ற பேராற்றல் அன்போடு உருவாக்கி கொடுத்திருக்கிறது இயற்கையின் மிகச்சிறந்த இயக்க சிறப்பில் இதுவும் ஒரு பகுதியாகும்.


🔷 இன்றைய தற்சோதனை


🔷 தகவல்களை சேகரிப்பதில் ஒரு சின்ன பின்னடைவை கூட நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது இன்றைய சின்னச்சின்ன தகவல்கள் தான் நாளைய நம்முடைய எதிர்காலத்திற்கு வித்தாக அமையப்போகிறது என்ற பேருண்மையை உணர்வோம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இயற்கை தனித்தனியாக தகவல் பெட்டகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது அவரவர்கள் முயற்சித்து அவரவர்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டிய வைகளை தாராளமாக பெட்டகத்தில் இருந்து எடுத்து அனுபவம் ஆக்கிக் கொள்ளலாம்


🔷 இன்றைய பண்புப்பயிற்சி


🔷 இதற்கு நமக்கு தேவையானது எல்லாம் உடல் அணுக்களும் காந்தமும் உயிர்த்துகள்களும் பலம் பெறுதலே ஆகும். நம்மை சுற்றி பிரபஞ்சம் முழுவதிலும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன அந்த தகவல்களை எல்லாம் சரியான முறையில் உள்வாங்கி மூளை செல்கள் வழியாக விரிவுபடுத்தி நமக்குள் உணர்வதற்கு அடிப்படையில் இவையெல்லாம் தேவை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத பண்பும் நல்லது செய்தல் உள்ளதை உணர்தல் அல்லதை தவிர்த்தல் ஆகிய பண்புகள் எல்லாம் நாம் நிறைவாக அமைத்துக் கொள்ளும் போது நமக்கும் பிரபஞ்சத்திற்குமான உறவு பலப்படும். வாழ்க வளமுடன்...


🔷 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔷 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments