நித்தியக்கடன் டிசம்பர் 18 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 18


🚥🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️🚥🕸️🚥


💠 இன்றைய நித்தியக்கடன்


💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💠 இன்றைய சாதகம்


💠 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


💠 இன்றைய நற்சிந்தனை


💠 குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது மிக மிக எளிது. குழம்பிய குட்டை போல் மனதை எப்போதும் வைத்திருந்தால் மற்றவர்கள் சுலபமாக அதனை பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள்‌‌. உங்களையும் மேலும், மேலும் குழப்பம் அடைய செய்து விடுவார்கள். நாம்  இந்த சமுதாயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த காரியவாதிகளை அடையாளம் கண்டு கொள்வதற்கு முதலில் நம்மை நாம் யார் என்று தெளிவாக அடையாளம் காண வேண்டும்.


💠 இன்றைய தற்சோதனை


💠 தெளிந்த நீரோடை போல மனதை எப்போதும் நிதானமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது அதில் வந்து விழக்கூடிய தூசிகளை வடிகட்டுங்கள். அதன்பின் அதில் வாழக்கூடிய ஜீவன்களுக்கு உதவி செய்யுங்கள். மனதை எப்போதும் குழம்பிய குட்டை போல வைத்திருந்தால், அதில் இருக்கக்கூடிய எந்த ஒரு ஜீவனுக்கும் எப்போதும் ஆபத்துதான். நம்முடைய மனதிற்கு, நம்முடைய வாழ்க்கைக்கு யாரெல்லாம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்களோ அவர்களுக்கும், நமக்கும் இது ஒருநாளும், ஒரு பொழுதும் நன்மையை தரப்போவது இல்லை. அதலால் தற்சோதனை செய்து அவைகளை வடிகட்டி அவைகளை விட்டு விலகுங்கள்.


💠 இன்றைய பண்புப்பயிற்சி


💠 கவனத்தோடு உடற்பயிற்சி, தவம், காயகல்பம், தற்சோதனை இவைகளில் ஈடுபடுங்கள். கவனக் குறைவை படிப்படியாக மாற்றி அமைத்துக்கொண்டு பூரணமான அறிவில் இணைவதற்கு முயற்சியை மேற்கொள்ளுங்கள். கவனத்தோடு வாழக்கூடிய பண்பு காந்தத்திற்கும் நமக்குமான இணைப்புப் பாலமாக அமைகிறது. வாழ்க வளமுடன்...


💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments