நித்தியக்கடன் டிசம்பர் 07 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 07


🌌🔶🌌🔶🌌🔶🌌🔶🌌🔶🌌


♾️ இன்றைய நித்தியக்கடன்


♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♾️ இன்றைய சாதகம்


♾️ வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


♾️ இன்றைய நற்சிந்தனை


♾️ ஒரு பள்ளி ஆசிரியருக்கு தான் கற்றுக் கொடுக்கும் பாடங்களை சரியாக புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மிகவும் பிடிக்கும். அதுமற்றுமின்றி நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கும் ஆசிரியருக்குமான நட்பு சிறப்பாகவே இருக்கும்.  கவனக்குறைவான, முயற்சி போதாத மாணவர்களையும் வெற்றி பெறச்செய்ய ஆசிரியர்கள் (இறைவன்) முயற்சி செய்வார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர்கள் மீதும் சிறப்பு கவனம் வைத்து நல்ல மதிப்பெண் எடுக்க உதவி செய்வார்கள். ஆனால் அனுகுமுறையும், நட்பும் வேறுவேறாக இருக்கும்.


♾️ இன்றைய தற்சோதனை


♾️ இதுபோலவே இறைவன் அறிவாக இருந்து சொல்வதையெல்லாம் கேட்கும் மனிதர்களுக்கும், இறைவனுக்குமான நட்பு சிறப்பாகவே இருக்கும். இது எதனால் அமைந்தது. ஆசிரியர் இடத்தில் (இறைவனிடம்) எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் கற்றுக்கொள்ளும் மாணவர்களுடைய திறமை, அறிவு, செயல்திறன், கவனித்தல், நினைவாற்றலுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளல். இதுவே மாணவர்கள் சிறப்பாக மதிப்பெண் எடுக்க காரணமாக அமைகிறது. இதுபோன்று நாமும் நமக்கும், இறைவனுக்குமான நட்பை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்சோதனை இதற்கான நட்பு பாலத்தை உருவாக்கும்.


♾️ இன்றைய பண்புப்பயிற்சி


♾️ "கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனிதன் போன பாதையை மறந்து போகலாமா" இந்த வரிகள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம் நம்மை நாம் திருத்திக் கொண்டு எதனை செய்ய வேண்டுமோ, அதை செய்து எதனிடமிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டுமோ,  அதனிடமிருந்து நாம் விலக்கிக் கொள்ளும் இப்பண்பில் நாளுக்கு நாள் சிறந்து விளங்குவோமாக வாழ்க வளமுடன்...


♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments