வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 04
💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥
🎲 இன்றைய நித்தியக்கடன்
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 இன்றைய சாதகம்
🎲 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🎲 இன்றைய நற்சிந்தனை
🎲 மனதில் உடலில் நோய்களும் குழப்பங்களும் தேங்கவோ வளர்ச்சி பெறவோகூடாது நோய்க் தேக்கமும் குழப்பமும் வளர்ச்சி பெற்றார் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எந்த ஒன்றை செய்வதாக இருந்தாலும் அதற்கு நிறைய தடைகளும் சிக்கல்களும் உருவாகிக்கொண்டே இருக்கும். சீரான ரத்த ஓட்டம் வெப்ப ஓட்டம் காற்றோட்டம் உயிரோட்டம் இருக்கவேண்டும் தெளிவான மனநிலையோடு எப்போதும் சிந்தித்து விளைவை அறிந்த விழிப்பு நிலையோடு வாழ வேண்டும்.
🎲 இன்றைய தற்சோதனை
🎲 நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னிலை உணர்ந்த மகான்களும் மகரிஷிகளும் நம்மை வாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள் அது மட்டுமின்றி நம்முடைய முன்னோர்களும் நமக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் இதற்கெல்லாம் முன்னதாக நம்முடைய பெற்றோர்கள் நம் தாய் தந்தை அவர்களுடைய வாழ்த்துக்கள் இந்த ஆன்மிக வாழ்க்கையிலும் லவ்கிக வாழ்க்கையிலும் வெற்றி பெற பேருதவியாக அமைகிறது.
🎲 இன்றைய பண்புப்பயிற்சி
🎲 உடற்பயிற்சி காயகல்பம் தவம் தற்சோதனை இவைகளை யெல்லாம் நாள் தவறாமல் செய்யக்கூடிய பண்பில் நாம் உயர்ந்து கொண்டே வரும்போது நமக்கு உள்ள துணிவும் மனதில் தெளிவும் உருவாகும் இதன் விளைவாக நாம் நம்மையும் மதிக்த்துவங்குவோம் நம்மை சார்ந்தவர்களையும் மதிப்போடு நடத்துவோம் தன் மதிப்பு உணராத மனிதருக்கு மற்றவர்களுடைய மதிப்பையும் மதிக்கவும் தெரியாது மதிக்கவும் முடியாது என்பதுதான் உண்மை வேதாத்திரியம் தன்னிலை விளக்கத்தை தெளிவாக நமக்கு அனுபவமாக்குகிறது இவ்வனுபவத்தோடு நாமும் நம் குடும்பமும் நலம்பெற வாழ்வோம் வாழ்க வளமுடன்...
🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment