வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 03
⏺️♾️⏺️♾️⏺️♾️⏺️♾️⏺️♾️⏺️
♦️ இன்றைய நித்தியக்கடன்
♦️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♦️ இன்றைய சாதகம்
♦️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
♦️ இன்றைய நற்சிந்தனை
♦️ உளச்சான்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு மனிதனுடைய எதிர்காலத்தையும் இறைநிலை தீர்மானிக்கிறது. உளச்சான்றின் படி வாழும் போது மட்டும்தான் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரணுக்களும் உயிர்ப்பு தன்மையோடு, இந்த பேரியக்க மண்டலம் முழுவதிலும் இயங்கக்கூடிய வலிமையையும், வளமையையும் பெறுகிறது. உளச்சான்றை மெத்தனப் போக்காக எண்ணிவிடாதீர்கள் உளச்சான்றின் மற்றொரு பெயர்தான் மெய்ஞானம், உடலாரோக்கியம், நன்நெறி, நேர்கொண்டபார்வை, உயிர் வளம், அறிவு வளம் அனைத்துமாகும்.
♦️ இன்றைய தற்சோதனை
♦️ சஞ்சித கர்மம், கிரகநிலை அமைப்புகளின் பால் நம் வாழ்க்கையில் அவ்வப்போது திசை மாற்றப்படலாம். இதிலிருந்து நம்மை காப்பது உளச்சான்று ஒன்றேயாகும். உளசான்றின் படி வாழ்வோர்க்கு இவ்வையகமும், வானகமும் தலைவணங்கும் என்பதே தர்மமாகும். இதை ஆழ்ந்த சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தற்சோதனை செய்து, இதன் மூலமாக எடுத்த முடிவை திட்டமிட்டு எப்போதும் அதிலிருந்து மாறாது விழிப்பு நிலையோடு இருந்து உளச்சான்றின்படி வாழ்வோமாக.
♦️ இன்றைய பண்புப் பயிற்சி
♦️ "கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக" வள்ளுவரின் இக்குரலுக்கு ஏற்ப நாம் கற்க வேண்டியது கற்றுக்கொண்டு நம்மிடையே இருக்கக்கூடிய கசடுகள் எல்லாம் அரும்படியாக வாழும்போது நமக்குள் இறைஞானம் ஊற்றெடுக்கிறது. இந்த இறை ஞானத்தின் அனுபவத்தை பெறுவதற்காகவே இம்மனிதப்பிறவி அமைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து நமக்குள் உள்ள கசடுகள் அரும்படியான பண்பை ஏற்று வாழ்வோம். வாழ்க வளமுடன்...
♦️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♦️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment