வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 29
🎲❄️🎲❄️🎲❄️🎲❄️🎲❄️🎲
🔮 இன்றைய நித்தியக்கடன்
🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔮 இன்றைய சாதகம்
🔮 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔮 இன்றைய நற்சிந்தனை
🔮 நம்முடைய வாழ்க்கை வட்டத்துக்குள் உருவாகும், எந்த ஒரு சூழ்நிலைக்கும் நாம் அடிமையாக இருக்கக் கூடாது. பற்றுதலும், ஒற்றுதலும் இல்லாமல் நம் கடமைகளை சரியாக செய்து விட்டு நிறைவாக வாழ வேண்டும். இந்த கருத்தினை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதற்கான இடத்தில் மனம் நிலைத்து, அறிவு மறந்துவிட்டால் இதுதான் மிகவும் பொருத்தமானது, என்ற எண்ணம் மேலோங்கும், சுலபமாக வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தவும் முடியும்.
🔮 இன்றைய தற்சோதனை
🔮 கடமைகளை சரியாக செய்வதற்கு பற்றுதலும், ஒற்றுதலும் தேவையில்லை. தெளிவு இருந்தால் போதும், நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய செயல் எதுவானாலும், அவற்றுக்கு நாம் நம்மை அடிமையாக்கி கொள்ளக்கூடாது. உணர்ச்சிவயப்படாமல் எந்த ஒரு செயலிலும் விளைவை உணர்ந்த விழிப்பு நிலையோடு இருந்து, மயக்கம் நீங்கி செயல் செய்ய வேண்டும். இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போமேயானால் உடற்பயிற்சி, காயகற்பம், தவம், தற்சோதனை இவற்றுக்கு கூட நாம் அடிமையாக இருக்கக் கூடாது.
🔮 இன்றைய பண்புப்பயிற்சி
🔮 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை இயந்திர தன்மையோடு ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அவ்வாறே அவைகளை செய்யவும் கூடாது. மேலும் வெறும் பழக்கமாக எந்த ஒன்றையும் வைத்துக் கொள்ளாமல், அதையும் தாண்டி அவைகளோடு தொடர்பு கொள்ளும் தருணங்களில், அந்த செயலுக்கும் உங்களுக்கும் இடையில் நின்று சாட்சியாக கூர்ந்து கவனித்துப் பழகுங்கள். இதன் விளைவாக "பதம் அடைந்தோம் ஒன்றானோம் பரமானந்தம்" என்ற நிலை உருவாகும். வாழ்க வளமுடன்...
🔮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment