வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 26
⛳🌌⛳🌌⛳🌌⛳🌌⛳🌌⛳
💦 இன்றைய நித்தியக்கடன்
💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💦 இன்றைய சாதகம்
💦 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
💦 இன்றைய நற்சிந்தனை
💦 எந்த ஒரு கெட்டி பொருளுக் குள்ளும் இறைநிலை இருப்பாக இருந்து, பல செயல் விளைவுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு லேசான பொருளுக்குள்ளும் இறைநிலை இருப்பாக பலவிதமான விந்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. உள்ளும் புறமுமாக இறைநிலை பேரறிவாக இருந்து செயல்பட்டு, அது அதுக்குள், அது அதுவாய் இருந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பில் இயங்குகிறது இறைநிலை. பேரியக்க மண்டலத்தில், பலவிதமான நிகழ்ச்சிகள் நடப்பதற்கும், உயிர் வகைகள் பிறப்பிற்கும், வாழ்வதற்கும் இந்த இயக்க அமைப்பே காரணமாகும்.
💦 இன்றைய தற்சோதனை
💦 இரும்பு துகள்களை ஒன்றாக்கி உருக்கும் சக்தியும் இறைநிலை தான், ஒரு மொட்டை மலர செய்து அதன் இதழ்களில் வாசனையாகவும், அதற்குள் மகரந்தமாகவும், தேனாகவும், மருத்துவ குணங்களாகவும் இருந்து செயல்படுவதும் அதே இறைநிலை தான். எல்லாம் வல்ல பேராற்றல் பிரபஞ்சமாகவும், கோடான கோடி கிரகங்களாகவும், உயிரினங்களாகவும் உருவாகி, நாம் வரை வந்த அனைத்தும் இறைநிலையின் தன்மாற்ற சரித்திரமே ஆகும். இந்த சரித்திர உண்மைகளை உளப்பயிற்சியில், நம்மை ஆழமாகவும் முழுமையாகவும் இணைத்துக் கொண்டு உணர முயற்சி செய்வோம்.
💦 இன்றைய பண்புப்பயிற்சி
💦 இறைவனான பேராற்றலும் இயற்கை சக்தியும் வேறு வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான். இறைவன் எங்கோ இந்த வான்மண்டலத்தை எல்லாம் தாண்டி இருக்கின்றான், என்பதெல்லாம் நம் முன்னோர்கள் அவர்கள் அறிவில் கண்ட கற்பனை கதைகளின் விளைவு. இந்த கற்பனைகளை கொஞ்சம் மனதில் இருந்து ஒதுக்கி வைத்து, மனதிற்கு உள்ளாகவும் உயிருக்கு மத்தியிலேயும் இருப்பது இறைவனே, என்ற உண்மையை உணர முயற்சிப்போம். இதன் விளைவாய் அன்பு மலரும் "தான், தனது" என்ற பொருள் பற்றும் அதிகாரப்பற்றும் கரையும், தான் துன்பப்படாமலும் பிறரை துன்பப்படுத்தாமலும் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
💦 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💦 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment