நித்தியக்கடன் நவம்பர் 24 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 24


🎯❄️🎯❄️🎯❄️🎯❄️🎯❄️🎯


🎱 இன்றைய நித்தியக்கடன்


🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎱 இன்றைய சாதகம்


🎱 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


🎱 இன்றைய நற்சிந்தனை


🎱 "நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ், இன்பமும் துன்பமும் உங்கள் சாய்ஸ்" வாழ்க்கை முறை இப்படித்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்பு  முறையை எவரொருவர் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்க்கை நிம்மதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த கோட்பாட்டை எவரொருவர் மீறுகிறாரோ அவர்கள் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் போராடுகிறார்கள். உங்களுடைய வாழ்க்கை உங்கள் வசம் தான் இருக்கிறது.இது  உங்களுடைய சாய்ஸ்


🎱 இன்றைய தற்சோதனை


🎱 இந்த வாழ்க்கை எதை வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எதனுடைய அடிப்படையில் இது அமைந்திருக்கிறது சிந்தித்துப்பாருங்கள். எப்போதும் உங்களை மிகுந்த கவனத்துடன் ஆராய்ச்சியோடு  வைத்திருந்து பழகுங்கள். ஏனெனில் வாழ்க்கைனுடைய நுட்பங்களை புரிந்துகொள்ளவும், அதனுடைய விளைவுகளை அறிந்து கொள்ளவும் தற்சோதனை  தேவைப்படுகிறது.


🎱 இன்றைய பண்புப்பயிற்சி


🎱 வாழ்க்கை ஒன்றும் புரியாத புதிர் அல்ல. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையோடும், எதார்த்த்தோடும்,  இருக்கிறீர்களோ கீழ்வரும் பண்புகளை உடன் சேர்த்துக் கொண்டு வாழும்போது எல்லாம் வெளிச்சமாகவே உணரப்படும். அயரா விழிப்பு நிலை, திட்டமிட்டல், தற்சோதனை இந்த பண்பில் நீங்கள் சிறந்து விளங்கும் போது தான் உங்களுக்கு உங்கள் வாழ்க்கை அறிமுகமாகும். அதுவரை அது ஒரு மாயை ஆகவே உங்களுக்குள் ஒளிந்து விளையாடும். அயரா விழிப்பு நிலையோடும், தற்சோதனையோடும், திட்டமிட்டு வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்....


🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments