வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 21
〽️🌐〽️🌐〽️🌐〽️🌐〽️🌐〽️
🍁 இன்றைய நித்தியக்கடன்
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍁 இன்றைய சாதகம்
🍁 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🍁 இன்றைய நற்சிந்தனை
🍁 இந்த பூமி மேற்பரப்பில் பலவிதமான காந்த பண்புகளை அடுக்கடுக்காக அமைத்துக் கொண்டு தன்னுடைய ராஜ்ஜியத்தை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது இறைநிலை வான்காந்த வெளியில் இருக்கக்கூடிய மேகங்கள் மழையை பொழியும்போது, காற்று மண்டலத்தையும் தாண்டி ஒன்பது கோடி மயில்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய சூரியன் தன்னுடைய காந்த அலைகளை வீசும் போதும் இடையில் இருக்கக்கூடிய அனைத்து காந்த பண்புகளோடு இணைந்து கலந்து அந்தந்த நிலப்பரப்புற்கும், அந்நிலப்பரப்பில் வாழும் எல்லா வகையான உயிரினங்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அழித்துக் கொண்டிருக்கிறது.
🍁 இன்றைய தற்சோதனை
🍁 கோள்களில் இருந்து வரும் காந்த அலைகளும் நட்சத்திரங்களில் இருந்து வரும் காந்த அலைகளும் எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்திருக்கிறது இருப்பினும் அவரவர்கள் கருமையத் தன்மைக்கு ஏற்றவாறு அந்த அந்த காந்த அலைகள் தன்மாற்றம் அடைந்து விடுகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு கோளினுடைய ஆக்க சக்தியானது நம் கருமையத்தில் இருக்கும் நல்வினையையும் தீ வினையையும் தூண்டி விட்டு விடுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் நம் வாழ்வில் நடைபெறும் போது இவை எல்லாம் கோள்களின் அமைப்பாலும் விதியின் அமைப்பாலும் நடைபெறுகிறது என்று நம்பிக்கொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம்.
🍁 இன்றைய பண்புப்பயிற்சி
🍁 இருப்பாக நம் கருமையத்தில் நல்வினை தன்மைகளும் தீவினை தன்மைகளும் இருக்கிறது, நாம் வான் காந்தத்தோடு தொடர்பு கொள்ளும் முறைக்கும் அளவுக்கும் ஏற்ப நம்முடைய உடலிலும் மனதிலும் வாழ்க்கையிலும் பல விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றது. இயற்கை பல்வேறு தன்மைகளையும், அமைப்புக்களையும் உள்ளடக்கமாக கொண்டதாகும் அவற்றையெல்லாம் நான் முழுமையாக புரிந்து கொண்டு நம் வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்கு முறையாக நமக்கு ஞானத் தன்மையோடும், அருள் தன்மையோடும் இருந்து வடிவமைக்கப்பட்டு, அருள் தந்தையால் வழங்கப்பட்டதே வேதாத்திரிமாகும். இப்பயிற்சியோடு நிறைவாக நம்மை நினைத்துக் கொண்டு நலமோடும் வளமோடும் வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...
🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment