வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 17
♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️♾️♦️
🐾 இன்றைய நித்தியக்கடன்
🐾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🐾 இன்றைய சாதகம்
🐾 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🐾 இன்றைய நற்சிந்தனை
🐾 ஒரு தென்னை மரத்தில் உச்சிப் பகுதியில் கீற்று முளைக்கத் துவங்குகிறது. நாளாக நாளாக கீழே சரிந்து கடைசியில் தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து விடுகிறது. இதற்கு இடையில் இந்த தென்னங்கீற்று தென்னங்கொலையை (இளநீரை) தாங்கி நிற்கிறது. ஆற்றலோடு முளைத்து எழுந்து தென்னங்கொலையை பாதுகாத்து ஆற்றலை அதே மரத்திற்கு மீண்டும் கொடுத்து விட்டு தான் மடிந்து போகிறது.
🐾 இன்றைய தற்சோதனை
🐾 இந்த தென்னங்கீற்று உள்ளிருந்து செயல்பட்ட இறை ஆற்றலையும், அதன் அறிவையும் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். ஒரு மரத்துக்குள் இருக்கும் அறிவே இவ்வளவு சிறப்பாக செயல்படும் போது. நமக்குள் இருக்கும் அறிவு எவ்வளவு சிறப்பாக செயல்பட வேண்டும். இதை தடுப்பது எது என்று சிந்தித்து பாருங்கள்.(வினைப்பதிவே தேகம் கண்டாய்) தற்சோதனை செய்து அந்த தடுப்பு நிலைகளை அகற்றிக் கொள்ளுங்கள். அறிவின் முழுமையில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
🐾 இன்றைய பண்புப்பயிற்சி
🐾 எவர் ஒருவரையும் மதிப்போடு நடத்தும் பண்பு வேண்டும் இதுவே இறைநிலையை உணர்வதற்கான தகுதியை உயர்தும். எல்லோருக்குள்ளும் இறைநிலை உள்ளடக்கமாக இருக்கிறது. அனைவரும் இறைநிலையின் தன்மாற்றம் என்ற உண்மையை உணர்ந்து அனைவரையும், மதித்து தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🐾 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🐾 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment