வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 16
🔶⭕🔶⭕🔶⭕🔶⭕🔶⭕🔶
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ பலவருட காலங்களாக தாவரங்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன என இவை அனைத்தும், அது அதனுடைய வாழ்க்கை முறையில் காலத்திற்கு காலம் மிகப் பெரிய மாற்றம் என்று ஏதுமில்லாமல் சிறுசிறு மாற்றத்தோடு மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி இல்லை. உருவத்தில், வாழ்க்கைமுறையில், விஞ்ஞான வளர்ச்சியில் அறிவின் உயர்வில் என அனைத்திலும் உயர்ந்து இருக்கிறோம். இவை அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. சிந்தித்து செயல்படும் முறையினால் மற்ற ஜீவ இனத்திலிருந்து நாம் மாறுபட்டவர்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
⛳ இன்றைய தற்சோதனை
⛳ தான், தனது என்று வாழ்வதும் அதன் வழியே மட்டுமே சிந்தித்து செயல்படுவதும் மனிதர்களுடைய வாழ்க்கை முறை அல்ல. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவை அனைத்தும் விலங்குகளுடைய வாழ்க்கை முறையாகும், குணங்களாகும். விலங்கின் வித்துத் தொடராக தன்மாற்றம் பெற்று வந்த காரணத்தினால், இந்த விலங்கின் குணங்கள் நமக்குள் தங்கிவிட்டன. இந்த விளங்கின பதிவுகளையும் தன்மைகளையும் நம் உடல் செல்களில் இருந்தும் உயிர் துகள்களில் இருந்து கருமையத்தில் இருந்தும் போக்கிக் கொண்டு தூய்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த மனித உடல் நமக்கு அமைந்திருக்கிறது, இதனை சரியாக முறையாக தற்சோதனை செய்து இவைகளிலிருந்து நம்மை விலக்கி கொள்வோமாக.
⛳ இன்றைய பண்புப்பயிற்சி
⛳ எல்லோரிடத்திலும் அன்பை செலுத்துங்கள். அன்பு உங்களுக்குள் வளர்ச்சி பெறட்டும். அன்பினால் மட்டுமே உங்களுக்குள் நீங்கள் பயணம் செய்ய முடியும். அன்பே இறை நிலையை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும் அற்புதமான பண்பாகும். நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர் நிறையுணர்வு, மன்னிப்பு இந்த மேம்பட்ட நிலைகளில் மனதை எப்போதும் வைத்து பழக்கங்கள் இந்த பழக்கம் உயிரின் தன்மையை உடல் செல்களின் தன்மையை மாற்றி அமைக்கும், மேலான வாழ்க்கையை வாழ எடுத்த இப்பிறவியின் நோக்கம் அதை நோக்கி பயணிக்கட்டும், வாழட்டும் உயிரும் மனமும் நமக்குள் நிறைவாக. வாழ்க வளமுடன்...
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment