நித்தியக்கடன் நவம்பர் 15 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 15


🔷🕸️🔷🕸️🔷🕸️🔷🕸️🔷🕸️🔷


⚙️ இன்றைய நித்தியக்கடன்


⚙️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


⚙️ இன்றைய சாதகம்


⚙️ புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


⚙️ இன்றைய நற்சிந்தனை


⚙️ உடல், உயிர், மனம் இந்த மூன்றின் வழியாகவும் நாம் பல்வேறு முறைகளில் இறைநிலையின் தன் மாற்ற சரித்திர உண்மைகளை உணர்ந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் பிரிந்து பிரிந்து இயங்கிக் கொண்டிருக்கும், இதன் நீதியை நாமும் பல்வேறு முறைகளில் முயற்சித்தால் தான் உணர முடியும். நமக்கு உள்ளும், புறமும், மேலும், கீழும் என நீக்கமற நிறைந்து எல்லாமுமாய் இருக்கும். இறைவனை நாமும் எல்லா வழி முறைகளையும் பயன்படுத்தி  உணரமுயற்சிப்போம்.


⚙️ இன்றைய தற்சோதனை


⚙️ இவ்வாறாக முயற்சி செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய பொறுப்பும் கடமையுமாகும். இந்த கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்து முடித்துவிட்டு விளைவை எதிர்பார்க்காமல் அமைதியாக இருக்கப் பழக வேண்டும். அவனுடைய நீதியானது ஒருநாளும் ஒரு பொழுதும் பிழையாக இருக்காது. என்ன நடந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு மீண்டும் முயற்சிப்போம், முடியும் என்ற நம்பிக்கையோடு...


⚙️ இன்றைய பண்புப்பயிற்சி


⚙️ புதிய முயற்சி, புதிய அனுபவம், புதிய பாதை எல்லாமும் புதிதாகவே இருக்கும். இதன் விளைவாக ஏற்படும் அனுபவங்களை மிகைப்படுத்தி புரிந்துகொண்டோ, சிந்தித்தோ வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கி கொள்ளாதீர்கள். எதையும் எதிர்பாராமல் இருப்பது இறைநிலையை உணர்வதற்கான முதல் தகுதியாகும். அவரவர் தம் கருமைய அமைப்புக்கு ஏற்பட்ட, அவரவர்களுக்கு வந்து சேர வேண்டியவை கட்டாயம் வந்து சேர்ந்தே தீரும். அவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது, அவன் கொடுக்க முடியாத ஒன்றை யாராலும் கொடுக்கவும் முடியாது. வாழ்க வளமுடன்...


⚙️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⚙️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments