நித்தியக்கடன் நவம்பர் 11 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 11


💥♾️💥♾️💥♾️💥♾️💥♾️💥


💠 இன்றைய நித்தியக்கடன்


💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💠 இன்றைய சாதகம்


💠 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


💠 இன்றைய நற்சிந்தனை


💠 பலவிதமான எண்ணங்களின் அனுபோக அனுபமாகவங்களின் தொகுப்பாகவும், மனம் இருக்கிறது. மனம் மூளை செல்கள் வழியாக விரிவடைந்து அது எதனோடு வேண்டும் என்றாலும் இணைந்து கொள்ளும். இணைந்து கொள்ளக்கூடிய பொருளுக்கு தக்கவாறு அதன் தன்னை கூடும் குறையும் மனம் எங்கே செலுத்தப் படுகிறதோ அங்கு காந்த சக்தி குவியும், மனம் எங்கே செலுத்தப் படுகிறதோ மனம் அதுவாக மாறும் இந்த இயற்கையின் அற்புதமான கோட்பாட்டை பயன்படுத்திக் கொண்டு, மனதின் நுண்மையான பகுதிக்கு சென்று அங்கே வாழ்வதுதான் வாழ்வாகும்.


💠 இன்றைய தற்சோதனை


💠 பல்வேறு நிலை இல்லாமலும் நிலையமாகவும் மனம் மூளையை மையமாகக் கொண்டு இயங்குகிறது, மூளை செல்களில் துவங்கி எங்கு வேண்டுமானாலும் நின்று நிலைத்து எதனோடு வேண்டுமானாலும் இணைந்து கொள்ளும், அற்புதமான ஆற்றலும் திறமையும் உடையது மனம். தற்சோதனை செய்து செய்து மனதை தூய்மை செய்யுங்கள். மனம் எந்த அளவு தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவு இந்த பிரபஞ்ச நிலைகளோடு இணைந்து வாழும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இறைத்தன்மாற்ற அமைப்புக்கும் மனம் இருக்கின்றது ஆனால் அந்த மனம் இயங்கும் தன்மையும் தரமும் திறமும் வேறுவேறாகும்.


💠 இன்றைய பண்புப்பயிற்சி


💠 சார்புத் தன்மை இல்லாமல் வாழும் முறைக்கு உங்களை நீங்களே பழக்கப்படுத்துங்கள். நடுநிலையாக இருந்து செயலாற்றும் பண்பு வேண்டும் இறைநிலையோடு நம்மை இணைக்கும் பாலமாக இப்பண்பு அமைகிறது. உங்களுடைய எல்லா வகையான செயல்களிலும், பற்றில்லாமல் நீதி நெறியை காப்பாற்றி வாழ்வதற்கு, இந்த நடுநிலை அன்பே பேருதவியாக அமைகிறது. இதனை சிறப்பாக வளர்த்து கொண்டு சிந்தனையால் செயலால் அனைவரும் ஒன்றுபடுவோம்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று பற்றுவிடற்கு-திருக்குறள். வாழ்க வளமுடன்...


💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments