நித்தியக்கடன் நவம்பர் 06 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 06


🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌


💢 இன்றைய நித்தியக்கடன்


💢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💢 இன்றைய சாதகம்


💢 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


💢 இன்றைய நற்சிந்தனை


💢 இந்த பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனை சுற்றி வரும் பாதையிலும் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அமைதி பூமியில் உள்ள வளங்கள் சரியான விகிதாச்சாரத்தில் இருக்கும் வரை தான் இந்த விகிதாச்சாரம். இது மாறும்போது பூமியினுடைய நிலைப்பாடும், அமைதியும் மாற்றத்திற்கு உள்ளாகி விடும். பூமியை பாதுகாக்கும் பொறுப்பிலும், கடமையிலும் நாம் இருக்கிறோம். எக்காரணத்தைக் கொண்டும் இயற்கை மாசுபடும் வகையில் நம்முடைய அன்றாட செயல்கள் இருந்துவிடக் கூடாது.


💢 இன்றைய தற்சோதனை


💢 நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள் இந்த வளங்கள் பூமியில் இருக்கும் வரைமட்டுமே நம்மை வளர்க்கும், காப்பாற்றும். அடுத்தடுத்த நிலைகளுக்கு உடல்ரீதியாக, மனரீதியாக, அறிவுரீதியாக நம்மை உயர்த்துகிறது. இந்த நிலம், நீர், நெருப்பு, காற்று, பாதரசம், கந்தகம், பாஷான வர்க்கம் அனைவருக்கும் மரம், செடி, கொடி, ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிரினங்கள் இவை அனைத்துமே இந்த பூமியினுடைய வளங்கள், நாம் உட்பட இந்த வளங்கள் அதனுடைய விகிதாச்சாரங்கள் ஏற்றத்தாழ்வு அடைந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை நிலைகுலையும், ஒன்றால் ஒன்று பாதிக்கப்படும் மனிதர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும்.


💢 இன்றைய பண்புப்பயிற்சி


💢 இயற்கையை பாதுகாத்துக் கொள்வதும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதும், வேறு வேறு அல்ல. இயற்கையை மதித்து இயற்கையோடு இணைந்து வாழும் பண்பில் உயர்வோம். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, இயற்கைக்கோ துன்ப விளைவு ஏற்படாத வகையில் நம் எண்ணம், சொல், செயலை ஒழுங்கு செய்து கொள்வோம். இந்த பண்பில் வாழ்வதற்கு கடமை உணர்வோடு சங்கல்பம் மேற்கொள்வோம். வாழ்க வளமுடன்...


💢 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💢 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments