வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 05
💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥
⏺️ இன்றைய நித்தியக்கடன்
⏺️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⏺️ இன்றைய சாதகம்
⏺️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூதநவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
⏺️ இன்றைய நற்சிந்தனை
⏺️ ஒரு குருவிக் கூட்டுக்குள் மூன்று குருவிக் குஞ்சுகள் இருக்கிறது. இந்த தாய் பறவையும், தந்தை பறவையும் முதலில் ஒரு குஞ்சு நன்றாக வளர்வதற்கு தேவையான அளவு உணவு கொடுக்கின்றன மற்ற இரண்டிற்கும் அவைகள் உயிர்வாழ்வதற்கான அளவு மட்டும் உணவு கொடுக்கப் படுகிறது. ஒரு குருவி நன்றாக வளர்ந்து இறக்கைகள் முலைத்தபின் அதை கூட்டை விட்டு பறக்கச் செய்கிறது. மற்றவைகளையும் அதேபோல வளர்க்கிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் "திட்டமிடல்" இந்த பொதுவான சிந்தனை நம்மில் எவ்வளவு பேரிடம் இருக்கிறது.
⏺️ இன்றைய தற்சோதனை
⏺️ தன்னிடம் இருக்கக்கூடிய பலவீனம், பலம் இந்த இரண்டையும் ஒரு மனிதன் தற்சோதனை செய்து புரிந்து கொண்டபின், திட்டமிட்டு செயலாற்றும் போது அவர் வாழ்க்கை சிறப்பாக அமையும். வளர்ச்சி என்பது ஒன்றன் பின் ஒன்றாக வளர்க்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக எல்லா வற்றையும் ஒரே நேரத்தில் வளர்த்து விட முடியாது. சரியாக திட்டமிட்டுக் கொண்டு, செயல் படக்கூடிய இந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இனியாவது நாம் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட துவங்குவோம், தற்சோதனை செய்வோம்.
⏺️ இன்றைய பண்புப்பயிற்சி
⏺️ பொறுமையாக அமைதியாக இருந்து எந்த ஒன்றின் மீதும் கவனம் செலுத்தும்போது அது அதற்குள் இருக்கக்கூடிய விஞ்ஞான உண்மையையும் மெய்ஞான உண்மையையும் நாம் படிப்படியாக உணர்ந்து கொள்ள முடியும் இந்த பண்பு நமக்கு எல்லா விதமான உளவியல், அறிவியல், விஞ்ஞானவியல் என அத்தனை இயல்களுடைய வளங்களும் நம் மனதிற்குள்ளாக மேன்மை பெறச் செய்கிறது, நம்முடைய ஆறாவது அறிவு முழுமை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகிறது, இந்த பண்பு தான் மனிதனை மனிதனாக்குகிறது. அமைதியும், பொறுமையும் காத்து எப்போதும் நிதானமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
⏺️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⏺️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment