நித்தியக்கடன் அக்டோபர் 28 2023 https://youtu.be/dU9jfkmbdcM

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 28


❄️〽️❄️〽️❄️〽️❄️〽️❄️〽️❄️


♾️ இன்றைய நித்தியக்கடன்


♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♾️ இன்றைய சாதகம்


♾️ சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


♾️ இன்றைய நற்சிந்தனை


♾️ ஒரு நதி பல்வேறு சூழ்நிலைகளைக் கடந்து கடலோடு சங்கமிக்கிறது. காற்றும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த பூமி முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பஞ்ச பூதங்கள் அனைத்தும் பல்வேறு விதமான அனுபவங்களை கொண்டு இருக்கிறது.  மனிதர்களுக்குள்ளும் இதுபோன்ற பல்வேறு விதமான அனுபவங்கள் ஒன்று சேர்ந்து தொகுப்பாகவே, மனிதர்களுடைய கருமையம் அமைந்திருக்கிறது. இந்த கருமையத்தில் உள்ள பெட்டகத்திலிருந்து மூளை செல்கள் வழியாக நாம் அனைத்தையும் விரித்துப் பார்த்து உணர்ந்து கொள்ள முடியும். இதனை உணர்வதற்கு நமக்கு முறையான பயிற்சியும் முயற்சியும் தேவைப்படுகிறது.


♾️ இன்றைய தற்சோதனை


♾️ புற அனுபவங்களில் மிகுதியான அளவு பல பிறவிகளைக் கடந்து விட்ட காரணத்தினால் மனிதர்கள் அந்த நிலைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அகம் நோக்கி அவர்களுடைய அறிவை சிந்தனையை சீரமைத்து கொண்டு, ஒவ்வொரு கணமும் நொடியும் தற்சோதனையில் இருக்க வேண்டும். மனம் புலன் அமைப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அறிவின் பாதையில் நகர்வதற்கு முயற்சி செய்யும்.


♾️ இன்றைய பண்புப்பயிற்சி


♾️ எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய நன்மையை உண்மையை உணர்ந்து அவற்றோடு மட்டும் பயணம் செய்யக்கூடிய அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உயர்வு பெறுவதற்காகவே மனிதர்களுக்கு இவ்வளவு சிறப்பான உடல் அமைப்பு, கருவமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு அமைந்த இந்த சரீரம் மற்ற ஜீவராசிகளுக்கு கிடைக்கப்பெறாத ஒன்று. இதனை பயன்படுத்திக் கொண்டு மனிதர்கள் தங்களை தாங்களே தன் இயல்பான தங்களுடைய நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்தப் பண்பே இறைவனை உணரக்கூடிய பண்பாகும். வாழ்க வளமுடன்...


♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments