நித்தியக்கடன் அக்டோபர் 27 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 27


🍁🔮🍁🔮🍁🔮🍁🔮🍁🔮🍁


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔰 இன்றைய சாதகம்


🔰 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை


🔰 உங்களுடைய மனதை ஒரு நெடுஞ்சாலை என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதில் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உங்களுடைய எண்ணம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். சரியான எண்ணம் வரும்போது அந்த எண்ணத்திற்கு சிக்னலை ஆன் செய்து செயலாக்க படுத்துங்கள். மற்ற எண்ணங்கள் அனைத்தையும் வேடிக்கை பாருங்கள். இது துவக்கத்தில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். ஆனால் இதைத் தவிர வேறு வழியே கிடையாது, நம் எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கு.


🔰 இன்றைய தற்சோதனை


🔰 இந்த நெடுஞ்சாலையில் துவக்கத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் படிப்படியாக தன்னுடைய வேகத்தை குறைக்க தொடங்கும். அது ஒரு அளவுமுறைக்குள் தன்னை கட்டமைத்துக் கொள்ளும், இந்த திட்டம் செயலுக்கு வரும். நீங்கள் உங்கள் எண்ணங்களை கண்காணிக்கிறீர்கள் என்று அந்த எண்ணங்களுக்கு தெரிந்தால் தான், அந்த எண்ணங்கள் தன்னைத் தானை  உணர்ந்தால் தான், அதன் வேகம் குறையும். இதற்கு அனுதினமும் தற்சோதனை செய்யுங்கள், எந்த ஒரு எண்ணத்தையும் விட்டு விடாமல்‌...


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 எந்த ஒரு துன்பத்தையும் என் வாழ்க்கையில் நான் சந்திக்க கூடாது என்று எண்ணாதீர்கள். வருவது வரட்டும் அதை எதிர்கொள்ள கூடிய திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நேர்நிறை உணர்வோடு அனைத்தையும் சந்திக்க கற்றுக்கொள்ளுங்கள். வேதாத்திரி மகரிஷியின் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்வோம். "சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட சந்தேகம் சிக்கலின்றி சாட்சி கூறும் உன் உள்ளம்" இப்பண்பில் அகன்று விரிந்து ஓங்கி வளர்வோமென்று சங்கல்பம் மேற்கொள்ளவோம். வாழ்க வளமுடன்...


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments