நித்தியக்கடன் அக்டோபர் 26 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 26


⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕


🌌 இன்றைய நித்தியக்கடன்


🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌌 இன்றைய சாதகம்


🌌 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🌌 இன்றைய நற்சிந்தனை


🌌 மனிதர்களாகிய நம்முடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் ஒரே கோட்டில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் ஒரு குறளில் இவ்வாறு விளக்கியுள்ளார்கள் "பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்" மேலும் இக்குறளில் நாகரிகம் என்றால் இதுதான் என்பதையும் கூறுகிறார்கள். முன்னுக்குப்பின் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கிறதா! என்பதை நீங்களே உங்களை கண்காணித்து சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.


🌌 இன்றைய தற்சோதனை


🌌 மற்றவர்கள் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் போது, அது பெரும்பாலும் யாருக்கும் பிடிப்பது இல்லை. தேவையில்லாமல் அவர்கள் மீது சினம் தான் எழும். ஆதலினால் உங்களை நீங்களே தற்சோதனை செய்து தகவமைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய மனித மெய்ஞான அறிவு உயர்வதற்கும் இந்த வழிமுறைதான் சிறந்ததாக இருக்கும். தன்னைத்தானே ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளுதல், தெளிந்த நீரோடையாய் மனதை பராமரித்தல்...


🌌 இன்றைய பண்புப்பயிற்சி


🌌 உடல் இயக்கம், மன இயக்கம், அறிவு இயக்கம் இந்த இயக்கங்கள் அனைத்தையும் நலமுற காத்தும், மென்மேலும் வளர்ச்சி பெறும் வகையில் பராமரித்தலும் மனித அறிவு உயர்வுக்கு மிகவும் அவசியமாகும். இந்த பண்பில் நாம் உயர்வு பெற பெற நமக்கு உள்ளுணர்வு அதிகரிக்கும். மறைபொருள் விளக்கங்கள் தெளிவாக புரியும். தனக்கும், பிறருக்கும், துன்பம் இல்லாமல் வாழும் முறையை கடைபிடித்து அதன்பின் வாழத் துவங்குவோம். இந்த சிறப்புமிக்க பண்பில் உயர்ந்து சிறந்து நாமும் நம் குடும்பமும் விளங்குவோமாக... வாழ்க வளமுடன்....


🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments