வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 25
🔥💦🔥💦🔥💦🔥💦🔥💦🔥
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் இணக்கமான தன்மையும் சூழ்நிலையும் இல்லாத போது உடலில் ரசாயன குழப்பம் ஏற்படுகிறது, மூளை செல்கள் குழப்பமடைகின்றன. எப்போதும் உடல், மனம், உயிர் இவைகளை இணக்கமான தன்மையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். இது முடியாதபோது உடலில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சிக்கல்கள் உருவாகின்றன. எந்த ஒரு சூழ்நிலைகளையும் முறையாக கையாளத் தெரியாமல் பலவிதமான சிக்கலும், குழப்பமும், தவறும் இதன் மூலம் விளைகின்றது.
🎱 இன்றைய தற்சோதனை
🎱 இவ்வாறு நடைபெறுகிறதா? என்பதை தற்சோதனை செய்து தெளிவான சிந்தனையோடு ஆராய்ச்சி செய்து பாருங்கள். எந்த ஒரு கொள்கையும் நீங்கள் உங்களுடையதாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமானால்... அது தற்சோதனைக்கு பின்னால் தான் அமையும். நமக்கு தெரியவரும் தகவல்கள் அனைத்தையும் தற்சோதனைக்கு உட்படுத்த வேண்டும். வாழ்க்கையில் அந்த தகவல்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டுமானால் தற்சோதனை மிகவும் அவசியமாகும். தற்சோதனை இல்லாமல் போனால் நமக்கு தெரியவரும் தகவல்களை, இந்த காதில் கேட்டு இந்த காதில் விட்டு விடுவோம்.
🎱 இன்றைய பண்புப்பயிற்சி
🎱 சின்னச் சின்ன வெற்றிகளாக சேகரிக்க துவங்குவோம். "சிறுதுளி பெருவெள்ளம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்வை பல பகுதிகளில் இருந்தும், பல நிலைகளில் இருந்தும், தூர்வாரி, தூய்மை செய்து வாழ்க்கை எனும் வான்பரப்பில் நீடித்து நிலைத்து வாழ்வோம். அதன் துவக்கமாக உறக்கம், உணவு, உழைப்பு, உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தில் எப்போதும் அளவு முறையை பின்பற்றக்கூடிய பண்பில் உயர்வோம். ஆக இவ்வாறு அளவு முறையை ஏற்படுத்திக் கொண்டு வாழும்போது, எவர் ஒருவருக்கும் துன்பம் தராமலும், தான் துன்பப்படாமலும் வாழும் இம்முறையே வாழச் சிறந்ததும். மனிதன் வாழ உகந்ததுமாகும். வாழ்க வளமுடன்...
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment