நித்தியக்கடன் அக்டோபர் 24 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 24


🕸️⛳🕸️⛳🕸️⛳🕸️⛳🕸️⛳🕸️


🍥 இன்றைய நித்தியக்கடன்


🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍥 இன்றைய சாதகம்


🍥 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🍥 இன்றைய நற்சிந்தனை


🍥 மழையாக பொழியும் நீரை அணைகளில் தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப பாசனத்திற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவது போல, வான் காந்தத்தை உடலுக்குள் சேகரித்து பழகவேண்டும். உடலுக்குள் சீவகாந்த சக்தியை சேகரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மேலும் அதற்கான முறையான பயிற்சியை மேற்கொள்ளும் போது, அணுக்களுக்கு இடையேயும் அணுக்களுக்கு உள்ளேயும் சீவகாந்தம் போதியளவு தங்கி தழைத்து இயங்க துவங்கும். கோள்களின் சஞ்சார நிலைக்கு ஏற்பவும், வெட்ப தட்ப ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவும், உணவு, எண்ணம், மற்றும் நம் அன்றாட பல வகையான செயலுக்கு ஏற்பவும், இவைகளை பயன்படுத்தும் முறைகளுக்கு தக்கவாறும், சீவகாந்தத்தில் அவ்வப்போது நம் உடலுக்குளாக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.


🍥 இன்றைய தற்சோதனை


🍥 இந்த செலவுகளை சரி செய்து கொள்ளவும், எப்போதும் சமநிலையில் வைத்து பயன்படுத்தவும், உடலையும், உயிரையும், மனதையும் பாதிக்காத வண்ணம் பாதுகாத்து கொள்ளவும், சீவகாந்தத்தை சேமித்து பழகவேண்டும். பஞ்சபூதங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த உடல் பஞ்சபூதங்களை ஒழுங்குபடுத்தி முறையாக இயக்கி பழகும் போது, இயல்பாகவே நம் உடலில் சீவகாந்தம் தங்கி தலைக்கும் வாய்ப்புகள் உருவாகிறது. இந்த சேமிப்பு பழக்கம் தான் நம்மை இறைநிலை வரை அழைத்துச் செல்லவும் பயன்படப் போகிறது. உடல் ஆரோக்கியமும், மன வளமும், உயிர் வளமும் இந்த சேமிப்பின் அடிப்படையிலேயே அமைகிறது...


🍥 இன்றைய பண்புப்பயிற்சி


🍥 சீவகாந்தம் போதிய அளவு நமக்குள் இருப்பாக இருக்கும் போது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவே முடியும். நம்முடைய எல்லா வகையான செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் ஆற்றல் சீவகாந்தமே ஆகும். மனதை உற்சாகத்தோடு வைத்துக் கொள்வதற்கும், நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வதற்கும், இயற்கையின் பல உண்மைகளை சிந்தித்து, உணர்ந்து, அனுபவம் ஆக்கிக் கொள்வதற்கும், இந்த சிறப்பு மிக்க சீவகாந்தத்தை சேகரித்து வாழும் பண்பில் உயர்வோம். உடலால், மனதால், உயிரால் வறுமை இல்லாமல் நாமும் நம் குடும்பமும் வாழ்வோம்... வாழ்க வளமுடன்...


🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments