நித்தியக்கடன் அக்டோபர் 23 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 23


♻️🏮♻️🏮♻️🏮♻️🏮♻️🏮♻️


🔶 இன்றைய நித்தியக்கடன்


🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔶 இன்றைய சாதகம்


🔶 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🔶 இன்றைய நற்சிந்தனை


🔶 தேன் சாதாரண உணவுப் பொருள் மட்டுமல்லை அதற்குள் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன மற்ற எந்த வகை மூலிகைக்கும் மருந்துக்கும் இல்லாத தனித்துவம் (be unique) இந்த தேனுக்கு உண்டு மலைகளிலும் காடுகளிலும் பலவகையான பூக்களிலும் இருந்து சேகரிக்கப்பட்ட தேனானது முழுமையான சிறந்த மூலிகை மருந்தாகும் இதனுடைய சிறப்பை உணர்ந்ததால் சித்த மருத்துவத்தில் தேனோடு குழைத்து உண்ணக் கூடிய மருந்துகள் வழங்கப்படுகின்றன இது போன்றே வான்காந்த்திலும் பல்வேறு சிறப்புகள் உள்ளடக்கமாக இருக்கின்றது.


🔶 இன்றைய தற்சோதனை


🔶 பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்துமே வானத்தில் உள்ளது யார் வேண்டுமானாலும் இந்த வான்காந்த தோடு சரியாக முறையாக இணைந்து தனக்கும் அதற்குமான இணக்கத் தன்மையை எல்லா வகையிலும் உயர்த்திக் கொண்டால் அக்காந்தத்தில் உள்ளடங்கி இருக்கும் அனைத்து விதமான ரகசியங்களும் அவருடைய அறிவில் சிந்தனையில் மூளை செல்கள் வழியாக விரிந்து செயல்படத் துவங்கும் தன்னைத் தானே அறிமுகம் செய்து கொள்ளும் இது நடைபெற வேண்டுமானால் உயிர் வளமும் மனவளமும் உடல் நலமும் தேவை.


🔶 இன்றைய பண்புப்பயிற்சி


🔶 ஆறுவகை குணங்களாகிய பேராசை சீனம் கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி உயர்வு தாழ்வு மனப்பான்மை வஞ்சம் இந்த தீயகுணங்களை (காம குரோத லோப மோக மத மாச்சரியங்கள்) சீரமைத்து நிறைமனம் சகிப்புத்தன்மை ஈகை கற்பு சமநேர்நிலை உணர்வு மன்னிப்பு என்ற குணங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு இரண்டொழுக்க பண்பாட்டை கடைபிடித்து ஒவ்வொரு நாளும் பயிற்சியை முழுமையான தன்னார்வத்தோடு செய்து வரும்போது "பிறப்பென்னும் பேதமை நீங்கி சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு" என்னும் வள்ளுவரின் குறள் அனுபவமாகும் வாழ்க வளமுடன்...


🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments