நித்தியக்கடன் அக்டோபர் 22 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 22


❄️🎯❄️🎯❄️🎯❄️🎯❄️🎯❄️


💠 இன்றைய நித்தியக்கடன்


💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💠 இன்றைய சாதகம்


💠 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூதநவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


💠 இன்றைய நற்சிந்தனை


💠 உணவு சாப்பிட்டபின் அந்த இடத்தை விட்டு உடனடியாக எழுந்து விடவேண்டும். எல்லா உணவுகளுக்கும் முன்னால் காயகற்பம் கட்டாயம் செய்ய வேண்டும், உணவை குடித்தும், நீரை விழுங்கியும் பழகுங்கள்.  தவம் முடிந்து எழுந்த பிறகும் முடிந்தவரை தவ உணர்விலேயே எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் இருந்து பழகுங்கள். தினம் ஒரு நற்சிந்தனையை வாழ்க்கை மலர் புத்தகத்திலிருந்தும், உங்கள் வாழ்க்கையிலிருந்தும் எடுத்துக்கொண்டு அதையே சிந்தித்து அதில் தெளிவு பெறுங்கள். இவை அனைத்தும் எதற்காக?


💠 இன்றைய தற்சோதனை


💠 மேலே சொல்லப்பட்ட வழிமுறைகளில் நம்மை எப்போதும் ஈடு படுத்திக்கொண்டு இருக்கும்போது பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்று உடல்களும் ஒருங்கிணைந்து இயங்கும். விஞ்ஞானபூர்வமான, மெய்ஞான நிலைக்கு உயர்த்தப் படும். அது எவ்வாறு உயர்வு பெறுகிறது என்பதை உங்களுக்குள் ஏற்படக்கூடிய மாற்றங்களை, நிகழ்ச்சிகளை சொந்தத் தனி முயற்சியினால் ஆழ்ந்து, சிந்தித்து உணர்ந்து புரிந்து கொள்ள தற்சோதனை செய்யுங்கள்.


💠 இன்றைய பண்புப்பயிற்சி


💠 எதற்காகவும், எப்போதும், எங்கேயும் எவரோடும் விவாதம் செய்யாதீர்கள் நம்முடைய ஒவ்வொரு வாழ்க்கை சூழ்நிலைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தில், பண்பில் உயர்வு பெறுங்கள். விவாதம் செய்வதால் எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமோ, மெய்ஞான முன்னேற்றமோ உடலிலோ, உயிரிலோ, மனதிலோ ஏற்படப் போவது கிடையாது. உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளும் பண்டில் உயர்வோம். வாழ்க வளமுடன்...


💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments