நித்தியக்கடன் அக்டோபர் 20 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 20


♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️🔘♦️


♾️ இன்றைய நித்தியக்கடன்


♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♾️ இன்றைய சாதகம்


♾️ வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


♾️ இன்றைய நற்சிந்தனை


♾️  "நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்" திருக்குறள். படிப்பறிவு என்பது வேறு, அனுபவஅறிவு என்பது வேறு, படித்ததை வாழ்வியலோடு இணைத்து வாழ்க்கையாக வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும். படித்துப் புரிந்து கொண்டவைகளை அப்படியே வாழ்க்கையாக வாழ்வதற்கு நமக்கு உள்ளும் புறமும் நிறைய தடைகள் இருக்கின்றன. அத்தடைகளை எல்லாம் முறையாக அகற்றிக் கொண்டு வாழ முயற்சி செய்ய வேண்டும். நமக்குள்ளாக எது இருக்கிறதோ, அதுவே நம்மிடம் இருந்து வெளிப்படுகிறது எண்ணமாகவும், செயலாகவும், பேச்சாகவும்.


♾️ இன்றைய தற்சோதனை


♾️ நம் உயிரிலும், மனதிலும், உடலிலும் எது இருக்க வேண்டும் எது அகற்றப்பட வேண்டும் என்பதை நாம் தெளிவாக முடிவு செய்து கொண்டு முறையாக பின்பற்றி வாழ வேண்டும். நம்முடைய வாழ்க்கையை நாம் பின்நோக்கி கொஞ்சம் அகன்ற மனதோடு சிந்தித்துப் பார்த்தால்... நாம் படித்து புரிந்து கொண்ட விஷயத்தை வாழ்க்கையாக வாழ்கிறோமா? இந்த கேள்விக்கு பதிலாக உங்களுக்கு கிடைப்பதை சிந்தனை செய்யுங்கள். படித்த நல்ல விஷயங்களில் உங்களை இணைத்து வாழ்த்தி கொள்ளுங்கள், அப்படியே வாழ்வதற்கும் முயற்சி செய்யுங்கள். தற்சோதனையே தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட அற்புதமான ஞானவழிப்பாதை.


♾️ இன்றைய பண்புப்பயிற்சி


♾️ நம்முடைய எண்ணம், சொல், செயல், இவற்றுக்கு முன்னும் பின்னும் நாமே இருந்து வாழும் பண்பில் உயர வேண்டும். இப்பண்பில் உயரும் போது நம்மைப் பற்றிய உண்மைகளை நாம் உணர்வதற்கும், உண்மையில் நாம் யார்? என்பதை தெரிந்து கொள்வதற்கும் நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பாகும். நம்முடைய செயல்பாடுகள் அனைத்திலும் நாமே இருந்து வாழக்கூடிய திறமையையும், அறிவையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். இந்த பண்பே நமக்கு சரியான வாழ்க்கை வழிகாட்டியாக அமையும். வாழ்க வளமுடன்...


♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments