நித்தியக்கடன் அக்டோபர் 19 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 19


⚙️🍁⚙️🍁⚙️🍁⚙️🍁⚙️🍁⚙️


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம்


🎲 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை


🎲 உங்களுடைய மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய மதிப்பை உணர்வதென்றால் உடல், உயிர், மனம், அறிவு இவற்றினுடைய மதிப்பை உணர்வதாகும். உங்களுடைய மதிப்பு உங்களுக்கு தெரியாத வரை, மற்றவர்களுடைய மதிப்பும் உங்களுக்கு புரியாது, அல்லது மற்றவருடைய மதிப்பை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லோருக்கு பொதுவானது அறிவும், திறமையும் இவற்றில் உங்களுடைய மதிப்பு உணரும்போது. உங்களுடைய திறமையும், அறிவும் மேலோங்கும். மற்றவர்களுடைய திறமையையும், அறிவையும் அப்போதுதான் உங்களால் வாழ்த்தவும் முடியும். அவர்கள் மேலும் வளர்ச்சி பெற உங்களாலான உதவியை செய்யவும் முடியும்.


🎲 இன்றைய தற்சோதனை


🎲 உங்களுக்கு கிடைக்காத ஒன்றில், உங்களால் உணர முடியாத ஒன்றில் மற்றவர்கள் வளர்ச்சி பெறும்போதும், அவர்களுக்கு அது கிடைக்கும் போதும், அதனை பார்த்து உங்களால் அமைதியாக இருக்க முடியாது. போட்டியும், பொறாமையும் மேலோங்கும். உங்களுடைய மதிப்பை உணர தற்சோதனை செய்வீர். உங்களுக்குள் இருக்கும் உண்மைகளை உணர முயலுங்கள் அது உங்களை வழிநடத்தும். அதுவே குரு அருளாகவும் இறையருளாகவும் உருவாகும்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 நம்மை நாம் மதிக்கும் பண்பில் உயரவேண்டும் போது அப்போது ஏற்படும் அமைதியிலும் தெளிவிலும் மட்டும் தான் மற்றவர்களை நம்மால் மதிக்கவும், உணர்வும் முடியும் என்ற உண்மையை உணர்வோம். நம்மை நாம் மதிக்கத் துவங்கினால் மற்ற அனைத்து மதிப்பும் நமக்குள் மேலோங்கி விடும் சீரான ஞான சிந்தனைகள் அங்கேதான் ஊற்றெடுக்கும் நம்மை நாம் மதிப்போம். வாழ்க வளமுடன்... 


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments