வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 16
🌐🎌🌐🎌🌐🎌🌐🎌🌐🎌🌐
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 பஞ்சபூதங்கள் ஒன்றுசேர்ந்த அறிவாச்சி தர உயர்வுக்கு ஏற்றதொரு உருவமைப்பு கொண்டவர்கள்தான் மனிதர்களாகிய நாம். மனிதனுடைய எண்ணத்திற்கு ஈடு இணையே கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் அப்படி இருந்தும் மனிதர்கள் வாழ்க்கை ஏன் துன்பம், இன்பம், குழப்பம், சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது? இன்பம் மட்டுமே நிரந்தரமாக ஏன் இல்லை? இதற்கு இயற்கையில் ஒரு காரணம் உண்டு! அவை என்னவென்றால்...
🔰 இன்றைய தற்சோதனை
🔰 நம்முடைய கருமையத்தில் இருக்கக்கூடிய விலங்கின பதிவுகள், மயக்கத்தில் நம்மை ஈடுபடுத்தி பழைய பாதையில் மீண்டும் மீண்டும் நம்மை அழைத்துச் செல்கிறது. இதிலிருந்து தன்னை எவர் ஒருவர் தற்காத்துக் கொள்கிறாரோ அவருக்கு இன்பமானது நிரந்தரமானதாக இருக்கும். ஏற்றத்தாழ்வுகளும், இடர்பாடுகளும், இன்னல்களும் இல்லாத வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும்.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 இந்த ஒரு அமைப்பு, முறையான பயிற்சியால் மட்டுமே அமையக் கூடியதாகும். நம் கருமையத்தில் நல்வினை பதிவு தீவினை பதிவு இரண்டுமே இருக்கிறது. மேல்நிலையில் இருப்பதெல்லாம் தீவினை பதிவு மட்டும்தான், நல்வினை பதிவு கொஞ்சம் ஆழத்தில் இருக்கிறது. அதை மேலே உயர்த்தி கொண்டு வருவதற்கும் மேலே இருக்கக்கூடிய தீவினை பதிவுகளை போக்கிக் கொள்வதற்கும், மனவளக்கலை பயிற்சியை நாள் தவறாமல் செய்து வரும்போது கரு மையத்திற்குள் சீர்திருத்தங்கள் உருவாகும். வாழ்க்கை அறிவாச்சி தரத்தில் உயரும். வாழ்க வளமுடன்...
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 எதில் எதிலெல்லாம் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்கிறீர்களோ, பாதுகாத்துக் கொள்கிறீர்களோ, அது அதிலிருந்தெல்லாம் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும், அளவு முறையோடு அணைத்தோடும் தொடர்பு கொள்ளுங்கள். எதையும் நீங்கள் வெறுக்கவும் வேண்டாம், அளவுக்கு மீறி எதையும் நீங்கள் நேசிக்கவும் வேண்டாம், இந்த கோட்பாடு உயர்திணை அஃறிணை என அனைத்திற்கும் பொருந்தும். எல்லா இடத்திலும் நடுநிலையோடு இருந்து இறை ஞானத்தில் உயரும் பண்பு நடுநிலை பண்பு. இதை உளமாற ஏற்று உளவியலில் உயருங்கள். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment