வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 14
🔶♨️🔶♨️🔶♨️🔶♨️🔶♨️🔶
🔘 இன்றைய நித்தியக்கடன்
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔘 இன்றைய சாதகம்
🔘 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🔘 இன்றைய நற்சிந்தனை
🔘 மனதை எதன்மீது செலுத்துகிறோமோ மனம் அதுவாகும். எல்லையில்லாத மெய்ப்பொருளோடு மனதை இணைத்து, இணைத்து பழக்கும்போது இறைநிலையினுடைய தன்மையும், திறமையும் அந்த மனதினுடைய தன்மையாகவும், திறமையாகவும் தன்மாற்றம் பெறும். இந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் நமக்கு "அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி" அவர்களால் துரியாதீத தவமும் பஞ்சபூத நவக்கிரக தவமும் அன்போடு வழங்கப் பட்டிருக்கிறது.
🔘 இன்றைய தற்சோதனை
🔘 உங்களுக்குள் ஏற்படாத மாற்றத்தை உயர்வினை மற்றவர்கள் அனுபவமாக பெறும்போது அதனை உங்களால் பொறுத்துக் கொள்ளவும் முடியாது அதனை மதிக்கவும் தெரியாது. ஆதலால் எல்லாவகையிலும் உயர்வு பெருங்கள் தற்சோதனை இதற்கு பக்கபலமாக அமையும்.
🔘 இன்றைய பண்புப்பயிற்சி
🔘 உள்ளதை உள்ளவாறு உணரும் பண்பில் உயர்வோம் எல்லாவற்றிலும் எல்லாமும் இருக்கிறது. நன்மை அதிகமாகவும் தீமை குறைவாகவும், அல்லது தீமை அதிகமாகவும் நன்மை குறைவாகவும், அல்லது இரண்டும் சமமாகவும் எல்லாவற்றிலும் எல்லாமும் இருக்கிறது. உள்ளதை உணர்வோம், அல்லது தவிர்ப்போம், நல்லதை செய்வோம். வாழ்க வளமுடன்...
🔘 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔘 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment