வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 06
💢♻️💢♻️💢♻️💢♻️💢♻️💢
♾️ இன்றைய நித்தியக்கடன்
♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♾️ இன்றைய சாதகம்
♾️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
♾️ இன்றைய நற்சிந்தனை
♾️ கடினமான கெட்டிப் பொருளாக இருக்கும் பாறையிலும் மரங்களும், செடிகளும் வளர்கின்றன. தோற்றத்திற்கும் பயன்பாட்டிற்கும் கடினமாக இருக்கும் அனைத்தும் உரிய முறையில் மற்றொன்றுக்கு தனக்குள் இடம் கொடுக்கின்றன. இதுபோன்று மற்றவர்களுக்கும் தன் வாழ்க்கையில் இடம் கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை ஆகும். இயற்கையினுடைய கோட்பாடும் விதியும் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
♾️ இன்றைய தற்சோதனை
♾️ மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு மற்றவர்களோடு நாம் இயல்பாகவோ, இலகுவாகவோ எண்ணம் சொல் செயல்களை பங்கிட்டுக் கொள்ள முடியாது. மன இறுக்கத்தில் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளுங்கள். விரிந்து விரிந்து மனதை ஒரே நிலையில் வைத்து தவம் செய்யும் போதும், தற்சோதனை செய்யும் போதும் மன இறுக்கங்கள் தளர்ந்து விடுகின்றன.
♾️ இன்றைய பண்புப்பயிற்சி
♾️ இந்த பூமியில் மனிதர்களுக்கு சிறப்பான கடமைகளும், பொறுப்பான வாழ்க்கைமுறையும் அன்போடு இயற்கை எனும் இறை பேராற்றலால் வழங்கப் பட்டுள்ளது, என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் போதுதான் நாம் நமக்கு துன்பம் செய்து கொள்ளாமலும், பிறருக்கு துன்பம் செய்யாமலும் வாழ்வதற்கு முயற்சி செய்வோம். இயற்கையினுடைய பேருண்மையை உணரும் பண்பில் நாளுக்கு நாள் உயர்வோமாக. வாழ்க வளமுடன்...
♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment