வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 04
🎭❄️🎭❄️🎭❄️🎭❄️🎭❄️🎭
🕸️ இன்றைய நித்தியக்கடன்
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕸️ இன்றைய சாதகம்
🕸️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🕸️ இன்றைய நற்சிந்தனை
🕸️ இந்த மண்ணுலகில் பிறந்த அனைத்து உருவத் தோற்றங்களும் மாற்றத்திற்கு உட்பட்டதே. மரணம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. மரணம் ஒரு முடிவல்ல தன்மாற்றம். ஆன்மா மற்றொரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை. விலங்குகளுடைய ஆன்மா உடலை விட்டு பிரிந்த சில நாள் பொழுதில் விண்ணோடும், காற்றோடும், நெறுப்போடும், நீரோடும், மண்ணோடும் கலந்துவிடும்.
🕸️ இன்றைய தற்சோதனை
🕸️ மனிதனுடைய ஆன்மா அப்படி உடனடியாக கலப்பது இல்லை. அந்த ஆன்மா பெற்றுள்ள இன்ப துன்ப அனுபவங்களுக்கும், ஏற்ப பாவ பதிவுகளின் அளவுமுறைக்கும் ஏற்ப அவை விண்ணோடும், காற்றோடும், நெறுப்போடும், நீரோடும், மண்ணோடும் கலப்பதற்கு காலங்கள் பல வாய்க்கிறது. உயிரைப் பற்றிய உண்மைகளை உணர்வதற்கு ஆழ்ந்து ஆழ்ந்து தவம் செய்து, "பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிரின் நிலை" என்ற தலைப்பில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பேசியுள்ள குறுந்தகடுகளையும், புத்தகத்தையும் மீண்டும், மீண்டும் திரும்பத் திரும்ப கேட்டும், படித்தும் தற்சோதனை செய்யுங்கள்.
🕸️ இன்றைய பண்புப்பயிற்சி
🕸️ எடுத்த எடுப்பில் உடனடியாக நல்ல பலன்களும் அனுபவமும் கிடைப்பதற்கு இல்லை. ஆதலினால் சோர்ந்துவிடாமல் விடாமுயற்சியோடு மீண்டும் மீண்டும் தற்சோதனை செய்யுங்கள், சிந்தனை செய்யுங்கள். அயரா விழிப்பு நிலையோடு இருந்து வாழும் பண்பில் உயர்வு பெற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நம்முடைய ஆன்மாவைப் பற்றிய உண்மைகளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உயிரைப் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பிறவி எடுத்து இருக்கிறோம். இப்பிறவியிலேயே வெற்றி பெறுவோம். வாழ்க வளமுடன்...
🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment