நித்தியக்கடன் அக்டோபர் 01 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 01


🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱🚥🎱


💢 இன்றைய நித்தியக்கடன்


💢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💢 இன்றைய சாதகம்


💢 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


💢 இன்றைய நற்சிந்தனை


💢 தவம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் இவை அனைத்திலும் தனித்தனியாக விஞ்ஞானரீதியாகவும் மெய்ஞானரீதியாகவும் விளைவுகள் ஏராளமாக இருக்கின்றபோதும், ஒட்டுமொத்தமாக இவை அனைத்தும் ஒரே ஒரு முடிச்சில் ஒன்றிணைக்கிறது. ஆழமான அழுத்தமான ஒரு விளைவை பரு உடல், காந்த உடல், உயிர் உடல் இம்மூன்று உடலுக்குள்ளாகவும் உருவாக்குகிறது, அந்த விளைவு என்னவென்றால்...!


💢 இன்றைய தற்சோதனை


💢 இப்பயிற்சிகளில் தன்னை ஆழமாக இணைத்துக் கொண்ட ஒவ்வொரு மனிதர்களுக்கும், அவர்களுடைய பொறுப்பையும் கடமையையும் நினைவு படுத்துகிறது. தனிமனித கடமையையும், குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையையும், சுற்றத்தாருக்கு செய்ய வேண்டிய கடமையையும், ஊராருக்கு செய்ய வேண்டிய கடமையையும், இவ்வுலகிற்கு செய்ய வேண்டிய கடமையென ஐந்து வகையான கடமைகளை சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அமையும் போதெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.


💢 இன்றைய பண்புப்பயிற்சி


💢 தெய்வீக எண்ணங்களை தூண்டிக் கொண்டே இருக்கும். மனிதன் மனிதனாக வாழக் கூடிய குணங்களான நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர் உணர்வு, மன்னிப்பு இந்த பண்புகளையும் குணங்களையும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நினைவு படுத்தி, அதில் வாழக்கூடிய சமுதாய அமைப்பையும் சூழ்நிலையையும் உருவாக்குகிறது. மேலும் விலங்கின பதிவுகளை வெளியேற்றக்கூடிய செயல்களையும் செய்கிறது. இன்னும் பலவிதமான நன்மைகளை உள்ளடக்கமாகக் கொண்ட வேதாத்திரியத்தை, நாள் தவறாமல் செய்வோம் நலமோடும் வளமோடும் வாழ்வோம். வாழ்க வளமுடன்... 


💢 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💢 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments