நித்தியக்கடன் செப்டம்பர் 27 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 27


🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம்


🎲 புதன்கிழமை 

காலை:- ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🎲 இன்றைய நற்சிந்தனை


🎲 கரடு, முரடான பாதையில் ஒரு வாகனத்தை செலுத்தும் போது அந்த வாகனத்தில் பயணம் செய்பவர்கள் எவ்வளவு துன்பத்தையும் இடர்பாட்டையும் சந்திப்பார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனமும் எவ்வளவு பழுதாகும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இதுபோன்று கரடுமுரடான வாழ்க்கை பாதையில் உங்கள் உடல் என்ற வாகனம் செல்லும்போது அந்த உடலும், மனமும் சொல்ல முடியாத துன்பத்தை சந்திக்கிறது. வாழ்க்கை பயணம் மிகுந்த இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகிறது.


🎲 *இன்றைய தற்சோதனை


🎲 எந்த ஒரு முடிவையும் தற்சோதனை செய்யாமல் அவைகளை வாழ்க்கையில் செயல்படுத்த முனையாதீர்கள், ஆர்வம் காட்டாதீர்கள். இவ்வுலகத்தில் நம்மை மயக்குவதற்காக ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கின்றன. அவைகளில் மயங்கி விடாமல் எப்போதும் விழிப்பு நிலையிலேயே உங்களுடைய எண்ணம் சொல் செயல்களை பயன்படுத்துங்கள். விழிப்பு நிலையோடு எப்போதும் இருக்க வேண்டுமானால் அதற்கு தவம்மும், தற்சோதனையும் தான் ஒரே வழியாகும்.


🎲*இன்றைய பண்புப்பயிற்சி


🎲 கவர்ச்சிகரமான உலகமிது  தன்னிடமுள்ள பொருள்களை மற்றவர்களை மயக்கி தான் இந்த உலகில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. இந்த வியாபார உலகில் உங்களுடைய ஜீவனுள்ள வாழ்க்கையை விற்று விடாதீர்கள். என்னுடைய வாழ்க்கை விற்பனைக்கு அல்ல என்பதை உங்களுடைய எண்ணம், சொல், செயல்கள் வழியாக பதிவு செய்யுங்கள். பரம்பொருளை உள்ளே உணர்வதற்கு இது ஒன்றுதான் மிகச் சிறந்த பண்பாகும். இந்த பண்பில் உயர்வோம். உள்ளத்திலுள்ள இறை பொருளோடு இணைவோம், வாழ்வோம். வாழ்க வளமுடன்...


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments