நித்தியக்கடன் செப்டம்பர் 14 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 14


🔥🍥🔥🍥🔥🍥🔥🍥🔥🍥🔥


🌐 இன்றைய நித்தியக்கடன்


🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌐 இன்றைய சாதகம்


🌐 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🌐 இன்றைய நற்சிந்தனை


🌐 இந்த பூமியில் பிறந்திருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும், தன்னிலை விளக்கம் பெறுவதற்காகவே பிறந்திருக்கிறோம். இந்த தன்னிலை விளக்கமானது தெளிவாக எந்த குறைபாடும் இல்லாமல், முழுமையாக வேதாத்திரி மகரிஷி அவர்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. மகரிஷி அவர்கள் நம்மிடையே சில பொறுப்புகளையும், கடமைகளையும் கொடுத்திருக்கிறார்கள். கேட்ட உண்மைகளை கேட்டவாறு உயிரிலும் மனதிலும் அப்படியே வைத்திருக்கக்கூடாது, அவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.


🌐 இன்றைய தற்சோதனை


🌐 இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்... இந்த விளக்கத்தை எவரெல்லாம் தன்னுடைய கடமையாகவும், பொறுப்பாகவும், ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்குள்ளாக இறைநிலை தன்மை முதலில் மேலோங்கத் துவங்கும். விளக்கத்துக்கும் பழக்கத்திற்கும் இடையே போராடாமல் உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை நாள் தவறாமல் செய்துவர பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்று உடல்களிளும் வலிமை பெருகும். இதன் விளைவாக விளக்கத்தின் வழியே வாழக்கூடிய மனோதிடமும் மன அமைதியும் உருவாகும்.


🌐 இன்றைய பண்புப்பயிற்சி


🌐 அதன் பின்னரே "நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்." இந்த இரண்டொழுக்க பண்பாடும் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த தீய குணங்களை எல்லாம் முறையாக மாற்றி அமைத்துக்கொண்டு நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்உணர்வு, மன்னிப்பு என்ற பண்புகளாக மாற்றி அமைத்துக் கொண்டு நம்முடைய பொறுப்புக்களையும், கடமைகளையும், செவ்வனே செய்து வர இறைஞானம் உதயமாகும் கருமையத்தில் இருந்து. வாழ்க வளமுடன்...


🌐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments