நித்தியக்கடன் செப்டம்பர் 01 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 01


♦️💠♦️💠♦️💠♦️💠♦️💠♦️


🌸 இன்றைய நித்தியக்கடன்


🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌸 இன்றைய சாதகம்


🌸 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🌸 இன்றைய நற்சிந்தனை


🌸 "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" இந்த வாசகங்கள் அனைத்தும் பரவலாக உலகில் பேசப்பட்டு வருகிறது. கொஞ்சம் நாம் வேதாத்திரிய ஞானத்தோடு சிந்தனை செய்து பார்ப்போம். ஏனெனில் உலக ஞானம் என்பது மேலோட்டமாக இருக்கிறது. ஆனால் வேதாத்திரிய ஞானம் என்பது எங்கும் எதிலும் விடுபட்டு போகாத முழுமையான ஞானமாகும்...


🌸 இன்றைய தற்சோதனை


🌸 அணுக்களால் ஒன்றுபட வேண்டும், அணுக்களால் கூடி வாழ வேண்டும், அணுச்சிதைவு இல்லாமல், அணுப்பிழவு இல்லாமல், அணுக்களை அடிப்படையாக கொண்ட இந்த பரு உடல் அமைப்பை, அணுக்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து அரவணைத்துக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியோடும், நல்ல சிந்தனை செயல்பாடுகளோடும், வாழ்வாங்கு வாழ்வதற்கு, இந்த அணு தன்மையில் நல்லதொரு இணக்கமும் நட்பும் உருவாக வேண்டும். அணுக்களின் இந்த சிறப்பான இயக்கத்தால் உருவாவதுதான் தான் தனது என்ற பொருள் பற்றையும் அதிகாரப் பற்றையும், நம்மிடமிருந்து விலக்கி வைக்கக்கூடிய அருட்பேராற்றல் ஆகும்.


🌸 இன்றைய பண்புப்பயிற்சி


🌸 அணுக்களால் உருவாக்கப்பட்ட இந்த சரீரம் நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் இவற்றில் நாளுக்குநாள் சிறந்து ஓங்க இந்த அணுக்களின் பிணைப்பு பலமாக அமைகிறது. நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர்நிறை உணர்வு, மன்னிப்பு இந்த பண்புகள் எல்லாம் நமக்குள் மேலோங்க அணுக்களின் கூட்டு இயக்க அமைப்பே அடிப்படை ஆதாரமாகும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை நாள் தவறாமல் செய்து நாமும் நம்முடைய சந்ததிகளும் வாழ்வாங்கு வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...

 

🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments