வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 29
☘️♨️☘️♨️☘️♨️☘️♨️☘️♨️☘️
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 வாசமில்லாத மலர், சுவையில்லாத கனி, வெப்பம் இல்லாத சூரியன், ஒளி இல்லாத சந்திரன், பருவநிலைக்கேட்ப மாற்றம் இல்லாத பூமி, வயதுக்கு ஏற்ப பக்குவமும், அனுபவமும் இல்லாத மனிதர்கள் இவை எல்லாம் இருந்தும் பயனில்லை. மாறாக இவற்றால் ஏற்படும் துன்பங்கள் அதிகம்.
🎱 இன்றைய தற்சோதனை
🎱 அனைத்து நிகழ்ச்சிகளும் மாறுதல்களுக்கு உட்பட்டது. அந்த மாறுதல்களை, நல்ல மாறுதல்களாக, மனிதர்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஜடப் பொருள்களுக்கும் உயிர் பொருளான மனிதனுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜடப்பொருள் அதன் சிறப்பை இழந்தால் அதற்கு பெருமை கிடையாது. மனிதர்கள் அறிவால், சிந்தனையால், செயலால் உயர்ந்தவர்கள். இவர்களுக்குள் இருக்கும் சிறப்பு வெளிப்பட வேண்டும். அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழ முடியும் பூமி பூமியாக இருக்க முடியும். தற்சோதனையில் ஆழ்ந்து உயர்வோம்.
🎱 இன்றைய பண்புப் பயிற்சி
🎱 இறை நீதிக்கு உட்பட்ட சிந்தனையை செயல்களை செய்துகொள்வதற்கு மனிதர்கள் ஒருநாளும், ஒரு பொழுதும் பயம் கொள்ளக்கூடாது. காலம் கருதி சில விஷயங்களுக்கு இடைவெளி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளும் ஒரு பொழுதும் பின்வாங்கி விடக்கூடாது. வாழ்க வளமுடன்...
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🎱 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment