வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 29
🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥
🌍 இன்றைய நித்தியக்கடன்
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌍 இன்றைய சாதகம்
🌍 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌍 இன்றைய நற்சிந்தனை
🌍 உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான அனைத்து வசதிகளையும், வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் கொண்டு உருவானது இந்த பூமி. இந்த பூமி தன்னை அதற்காகவே தகவமைத்துக் கொண்டது. சில வகையான செடிகளும், கொடிகளும், மரங்களும் யார் துணையும் இல்லாமல் வளர்கின்றன. எந்த வகையான உதவியும் இல்லாமல் பஞ்சபூதங்களும், ஒருங்கிணைந்து இந்த பூமி உருவானது.
🌍 உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப இப்பூமி தன்னை உருவாக்கிக் கொண்டது. மனிதர்கள் இந்த பூமியில் வருவதற்கு முன்னாலிலிருந்தே இந்த பூமி இயற்கை வளத்தோடு, மாசுகள் ஏதுமில்லாமல் முழுமையான ஆரோக்கியத்தோடும் சுற்றி சுழன்று கொண்டிருந்தது.
🌍 இன்றைய தற்சோதனை
🌍 மனிதர்கள் உருவானார்கள் இந்த பூமியினுடைய இயற்கை வளங்கள் அனைத்தும் தன்னுடைய வாழ்வின் வளமாக மாற்றி பயன்படுத்த துவங்கி, அது இன்று எல்லா வகையிலும் சீர்கேடாக மாசு நிறைந்ததாக அமைந்துவிட்டது. இதை நாம் நினைவில் கொண்டு இயற்கை வளத்தோடு இந்த பூமியை ஆரோக்கியமாக வாழ செய்வோம்.
🌍 இயற்கை வளங்களை நாம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் அவைகளை அழிக்காமல் நாம் பயன்படுத்தி பயன் காண வேண்டுமே தவிர அவைகளை அழித்து விட்டால் நாமும் கூடவே அழிந்து விடுவோம், என்ற உண்மையை உணர்வோமாக. இந்த உண்மையை நன்றாக தற்சோதனை செய்து நம்முடைய அடுத்த சந்ததிக்கு இயற்கையை காத்து வாழக்கூடிய வாழ்க்கை முறையை கற்றுக் கொடுப்போம்.
🌍 இன்றைய பண்புப் பயிற்சி
🌍 இயற்கையை மதிக்காமல் மற்ற உயிர்களுக்கும் இடம் கொடுக்காமல் நாம் மட்டும் இங்கே நிறைவாக வாழ்ந்து விட முடியாது. அறிவினம் என்பதும் உயிரினம் என்பதும் ஒரு சங்கிலித் தொடர். இந்த தொடரில் இருந்து ஒரு கன்னி விலகினாலும் மற்ற அனைத்தும் துண்டு பட்டுவிடும். நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம். மனிதர்களிடம் மற்ற உயிரினங்களும், மரம், செடி, கொடிகளும் இந்த வார்த்தையை சொல்வதாக சிந்தித்துப் பாருங்கள் "எங்களையும் வாழ விடுங்கள்" எல்லோரும் வாழும் உயர்ந்த பண்பில் சிறந்து விளங்கும் வாழ்க வளமுடன்...
🌍 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌍 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment