வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 27
🌀⚡🌀⚡🌀⚡🌀⚡🌀⚡🌀
💡 இன்றைய நித்தியக்கடன்
💡 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💡 இன்றைய சாதகம்
💡 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
💡 இன்றைய நற்சிந்தனை
💡 ஓரிடத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு Transformer தேவைப்படுகிறது. இது போல ஆங்காங்கே நாம் பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மின்மாற்றி மூலமாக மின்சாரத்தை கிராமம், நகரம், தொழிற்சாலை, வீடுகள் என்று பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்கிறோம். இவ்வாறு கொண்டு செல்லப்படும் மின்சாரத்தினுடைய அளவு தொழிற்சாலைகளுக்கும் வீடுகளுக்கும் ஒரே மாதிரியானது அல்ல வேறு வேறு. தேவைக்கு ஏற்ப மின் சக்தியின் அளவு கூட்டியும் குறைத்தும் வழங்கப்படுகிறது.
💡 இன்றைய தற்சோதனை
💡 அதுபோலவே நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்களுக்கு தேவையான அளவிற்கே தவஆற்றல் வழங்கப்படுகிறது. இந்த அளவையும் முறையையும் யார் தீர்மானிக்கிறார் என்றால் அவரவர்களுடைய தன்னார்வமும், விடாமுயற்சியும், வாழும்முறையுமே இதனை தீர்மானிக்கிறது. தற்சோதனை செய்து தன்னை இறை நீதிக்கு ஒத்தவாறு எவர் ஒருவர் தகவமைத்துக் கொள்கிறாரோ, அவருக்கு இந்த ஆற்றல் அந்தந்த சக்கரங்களுக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. இந்த வாசகங்களை நன்றாக தற்சோதனை செய்யுங்கள். இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கிடையாது. "சொல்லால் மட்டும் நம்பாதீர், சுயமாய் சிந்தித்து தெளிவு பெறுங்கள்".
💡 இன்றைய பண்புப் பயிற்சி
💡 இறைவனை உணரக்கூடிய தன்னார்வம் ஒன்றுதான் நமக்குள் உந்து சக்தியாக இருந்து எப்போதும் நம்மை உயர்த்த வல்லது. இந்த தன்னார்வத்தை ஒரு நாளும், ஒரு பொழுதும், ஒரு கணமேனும் இழந்துவிடாமல், எப்போதும் எல்லா வகையான எண்ணம், சொல், செயல் இவைகளின் வழியாக வெளிப்படுத்தி இறைவனை உணரும் பண்பில் உயர்வோம். தன்னைத்தானே உணர்ந்து கொள்ளக்கூடிய தன்னார்வ பண்பில் நாளுக்கு நாள் சிறந்தோங்குவோம். வாழ்க வளமுடன்...
💡 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💡 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment