நித்தியக்கடன் ஆகஸ்ட் 26 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 26


🍁👣🍁👣🍁👣🍁👣🍁👣🍁


🗾 இன்றைய நித்தியக்கடன்


🗾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🗾 இன்றைய சாதகம்


🗾 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.

 

🗾 இன்றைய நற்சிந்தனை


🗾 ஒரே ஒரு துகயிலிருந்து புறப்பட்டவர்கள் தான் நாம் மீண்டும் எண்ணத்தினால் முயற்சியினால் அந்த ஒரு துகளாக நாம் மாறி நின்று பழகப் பழக இந்த பிரபஞ்ச தன்மாற்றம் சரித்திரம் இது தான் என்று நமக்கு தெளிவாக விளங்கும் அதனோடு நம்முடைய சொந்த வரலாறு இது என்றும் நமக்கு தெரியும் இதற்கு ஒரு முறையான முயற்சியும் பயிற்சியும் ஆசான் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிறப்பாக வடிவமைத்து அருளியிருக்கிறார் நான் எங்கிருந்து புறப்பட்டோமோ அங்கேயே மீண்டும் எண்ணத்தாலும் சிந்தனையாலும் சென்று இணையும் நிறைவான வாய்ப்பு.


🗾 இன்றைய தற்சோதனை


🗾 இந்த உண்மைகளை எல்லாம் தெளிவாக உணர்ந்து கொண்ட மனோநிலையை தான் வள்ளுவர் இக்குறளில் விளக்கியுள்ளார் ஐயத்து நீங்கீத் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து ஆண்டாண்டு காலங்களாக சித்தர்களும் மகான்களும் எண்ணிய எண்ணத்தை எல்லாம் மகரிஷி அவர்கள் முழுமைப்படுத்தி நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றார்போல பிழையில்லாத இன்னல் இல்லாத பயிற்சியாக அன்போடும் அருளோடும் வழங்கியிருக்கிறார்கள் இதனை எல்லாம் தற்சோதனை செய்து விளக்கத்தோடு நாம் இப்பயிற்சியை நலமுற செய்வோம்.


🗾 இன்றைய பண்புப்பயிற்சி


🗾 முக்கால யோக முறையில் இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி என்ற அட்டாங்க யோகமாக இருந்தது இது அக்கால யோக முறையாகவும் பிரம்மச்சரிய யோக முறையாகவும் இருந்தது குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு இந்த அட்டாங்க யோக முறையை பின்பற்ற முடியாது குடும்ப வாழ்வும் குண்டலினி யோகமும் என்ற முறையில் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் மனித வாழ்க்கையிலுள்ள இன்னல்களை இடர்ப்பாடுகளை போக்கிக் கொள்ளும் மார்க்கம் மனவளக்கலை. வாழ்க வளமுடன்...

 

🗾 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🗾 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments