வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 23
🌀🗾🌀🗾🌀🗾🌀🗾🌀🗾🌀
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ ஒரு இரும்பை பழுக்க காயவைத்து அதனை அடித்து இன்னொரு வடிவத்துக்கு மாற்ற முடியும் இது ஒரு முறை. அதே இரும்பை நெருப்பில் உருக்கி திரவ நிலைக்கு மாற்றி அதன் பின் அச்சில் ஊற்றி ஒரு வடிவத்திற்கு கொண்டு வாரலாம் இது ஒரு முறை. இதுபோல இருகி இருக்கும் ஒரு நிலைப்பாட்டை மாற்றி அமைக்க வெப்பம் தேவை. நம் உயிரில் கருமையத்தில் சுருங்கி இருகி இருக்கும் களங்கங்களை போக்கிக் கொள்வதற்கு அதனுடைய தன்மையை மாற்றியமைக்க வெப்ப சக்தி தேவைப்படுகிறது. அத்தகைய வெப்ப ஆற்றலாக இருப்பது தவத்தினால் பெருகும் தவக்கனல்.
⛳ இன்றைய தற்சோதனை
⛳ தவக்கனலை கொண்டு கருமையத்தில் உள்ள சஞ்சித கருமத்தையும், மூளை செல்களில் உள்ள பிராப்த கர்மத்தையும், நம்மால் சிறப்பாக சீரோடு மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதற்கு தவக்கனல் ஒன்றே வழி துணையாகும். இந்த தவக்கனலை பயன்படுத்தி சிறப்பான நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ளலாம். எவ்வாறெல்லாம் தவக்கனலை பயன்படுத்துவது என்று தற்சோதனை செய்யுங்கள். உங்களை நீங்களே உருவகப்படுத்துங்கள்.
⛳ இன்றைய பண்புப் பயிற்சி
⛳ "ஒழுக்கத்தால் உலகினை நட்பு கொள்ளும் அன்பு நெறி" இந்த ஒழுக்க நெறியை பின்பற்றும் போது நம்முடைய சஞ்சித பிராரப்த கருமங்கள் சீரமைக்கப் படுகிறது. இந்த ஒழுக்க நெறியெனும் ஞானத்தின் கீழ் நம்முடைய எண்ணம், சொல், செயல்களை பண்போடு வைத்துக் கொள்ளும் போதுதான், தவக்கனல் நமக்குள் நிரந்தரமாக தங்கி நம் வாழ்வில் நலம் விளைவிக்கிறது, என்ற உண்மையை உணர்வோம். உணர்ந்த நிலையில் நின்று ஒழுக்கநெறி பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment