நித்தியக்கடன் ஆகஸ்ட் 20 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 20


🎲💠🎲💠🎲💠🎲💠🎲💠🎲


🏮 இன்றைய நித்தியக்கடன்


🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏮 இன்றைய சாதகம்


🏮 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

🏮 இன்றைய நற்சிந்தனை


🏮 நீர் அதனுடைய வழிப்பாதையில் எதனை எல்லாம் வருடிக்கொண்டு கடந்து செல்கிறதோ, எது மாதிரியான நிலப்பரப்பை கடக்கிறதோ, இது அத்தனையிலும் உள்ள வளங்களையெல்லாம் தனதாக்கிக்கொண்டு பயணம் செய்கிறது. காற்றும் அதேபோல்தான் எதையெல்லாம் வருடிக்கொண்டு ஒரு கண்டம் விட்டு இன்னொரு கண்டம் பயணம் செய்கிறது. அது அத்தனையும் அவைகளின் வளமாக தன்மாற்றம் பெறுகிறது. இது போல் தான் நாம் தவத்தில் எதையெல்லாம் அடைகிறோமோ, எந்த சக்தியோடு எல்லாம் நினைக்கிறோமோ, அதுவெல்லாம் அந்த நொடியில் அந்த தருணத்தில் நம்முடைய தாகவே அமைகிறது.


🏮 இன்றைய தற்சோதனை


🏮 இந்த இயற்கையினுடைய இயக்க நீதியை நன்றாக உணர்ந்து கொண்டு நமக்குள் இணைந்த சக்தியை தன்மையை நாம் நமதாக்கிக்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ செயல்பட முனைய வேண்டும். நம்முடைய ஒழுங்கமைக்கப்பட்ட எண்ணம், சொல், செயல்களால் இந்த சக்தி மேலும், மேலும் மேன்மை பெறுகிறது. அதே சமயம் நம்முடைய ஒழுங்கமைக்கப்படாத எண்ணம், சொல், செயல்களால் இதே சக்தி விரயமாக்கப்படுகிறது. இந்த உண்மையை உணர்வதற்கு  தற்சோதனையில் நம்மை எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது நம்மோடு எப்படி இணைந்து செயல்படுகிறது, அதனுடைய தரம் மாறாமல், தன்மை மாறாமல் எப்படி நம்முடைய அறிவோடு இணைத்துக்கொள்வது என்பதை விரிவான மனநிலையில் தெளிவாக தற்சோதனை செய்து உணர வேண்டும்.


🏮 இன்றைய பண்புப் பயிற்சி


🏮 இவ்வாறாக நமக்குள் இணைப்பு பெற்ற இயற்கையினுடைய ஆற்றலையும், சக்தியையும் வைராக்கியமான மனோநிலையில் நின்று நம்மை நாம் ஞானத்திற்கு உகந்த தன்மையோடும், தரத்தோடும் தகவமைத்துக் கொள்ளும் போதுதான் அந்த சிறப்பான ஆற்றலும் சக்தியும் நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும். நம்முள் இருந்து முழுமையாக அது தன்னை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து கொள்ளும். எவருக்கும் துன்பம் செய்யாமல் தானும் துன்பப்படாமல் வாழும் பண்பு ஒன்றுதான் இந்த சிறப்பான நிலைக்கு நம்மை உயர்த்த வல்லது. வாழ்க வளமுடன்...

 

🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments