வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 12
🍥❄️🍥❄️🍥❄️🍥❄️🍥❄️🍥
♨️ இன்றைய நித்தியக்கடன்
♨️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♨️ இன்றைய சாதகம்
♨️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
♨️ இன்றைய நற்சிந்தனை
♨️ எந்த நிலப்பரப்பில் மழை இல்லையோ, பருவகாலங்கள் சரியாக அமைப்பில் இல்லையோ, அப்பகுதியில் வாழக்கூடிய மரங்களும், செடிகளும், உயிர் வகைகளும் பலவகையான துன்பங்களுக்கு ஆளாகின்றனர். ஆக்சிஜனை மரங்கள் குறைவாக வெளியிடுகின்றன. ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வகைகள் உடலாலும், மனதாலும் ஆரோக்கியத்தை இழக்கிறது. உடல் வறட்சியும், மன வறட்சியும் ஏற்படுகின்றது. பருவகாலங்கள் சரியாக அமைய நாம் தான் இவைகளைப் பாதுகாக்க வேண்டும்.
♨️ இன்றைய தற்சோதனை
♨️ வீடுகள் தோறும் மரம் வளர்ப்போம்! மழை வளமும்! மண் வளமும் காப்போம்! இதனை உலக நாடுகள் அனைத்திலும் சட்டமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். ஒன்று அவர்கள் வீட்டு நிலப்பரப்பிற்குள் மற்றொன்று சாலை ஓரத்திலும் வளர்க்க வேண்டும். இந்த சட்டத்தை உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மரம் வளர்த்தால் தான் மின் வசதி, குடிநீர் வசதி என்று கடுமையான சட்ட திட்டத்தின் மூலம் அமுல்படுத்தி உலக நாடுகள் முழுவதும் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முன்பாக நாம் இதனை சிந்தித்து தற்சோதனை செய்து இப்போதே மரம் வளர்க்க துவங்குவோம். சாலைகள் முழுவதும் மற்றும் வீடுகள் தோறும் மரம் வளர்ப்போம்.
♨️ இன்றைய பண்புப் பயிற்சி
♨️ நாளை நடப்பதையும் சிந்தித்து இன்றே அதற்கான தீர்வுகளோடு, நம்மை சீர்திருத்திக் கொண்டு சிறப்பாக வாழும் பண்பில் உயர்வு காண வேண்டும். நம்முடைய செயல்கள் அனைத்தும் நமக்கும், பிறருக்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், துன்பத்தை துன்ப விளைவை, ஏற்படுத்தாத வகையில் அமைத்துக் கொள்ளும் பண்பு மனித பண்பாகும். இதில் உலக மக்கள் அனைவரும் சிறந்து ஓங்கி. வாழ்க வளமுடன்...
♨️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♨️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment