வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 11
🏮🔰🏮🔰🏮🔰🏮🔰🏮🔰🏮
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 கருமையம், குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் இந்த ஏழு வகையான அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் சரியாக அமைய வேண்டுமானால் அதற்கு தகுந்த ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இவைகள் எப்போதும் அவரவர் உடலில் சீராக இருக்க வேண்டும். மாறாக இவ்வோட்டங்களில் குழப்பங்கள் ஏற்படும்போதும் வெப்ப தட்ப ஏற்ற தாழ்வு, எண்ணம், உணவு முறை இவைகளை ஒழுங்கற்ற முறையில் பின்பற்றும் போதும், இம்மூன்று இயக்கங்களும் சீராக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. நமக்கு நடைபெற வேண்டிய நன்மைகள் தடுக்கப்படலாம், கால தாமதமாகலாம், பலவகையான இடர்பாடுகளும், இன்னல்களும் ஏற்படலாம். ஆகவே எப்போதும் இவ்வியக்கங்களை சீராக வைத்துக்கொள்ள, கடைபிடிக்க வேண்டிய செயல்களை பின்பற்ற வேண்டும்.
🎱 இன்றைய தற்சோதனை
🎱 உடல் அணு அடுக்குகள், காந்த இயக்கம், மூளை செல்களின் துரித இயக்கம் இவைகளெல்லாம் எப்போதும் எல்லாவகையிலும் சீரான முறையில் இயங்க வேண்டும். இவ்வாறு அமைத்துக் கொண்டால் பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்று உடல்கள் அமைப்பும் சிறப்பான முறையில் இணைந்து செயல்படும். இவைகளை எல்லாம் சிறப்பான முறையில் நாம் பராமரிக்க வேண்டுமானால், அதற்கான தகுந்த பயிற்சி முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.தன்னார்வத் தோடும், அற்பனிப்பு உணர்வோடும் பயிற்சியில் தன்னை இணைத்துக் கொள்ளும்போது எண்ணிலடங்கா நல்விளைவுகள் அனுபவமாகும்.
🎱 இன்றைய பண்புப்பயிற்சி
🎱 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இந்த நான்கும் ஏழு சம்பத்துக்களும் எல்லா காலத்திலும் நமக்கு சாதகமாக உருவாக்கித் தரக்கூடியவைகள். இந்த பயிற்சி நமக்குள் மூவகையான உடலையும், மூவகையான வகையான ஓட்டங்களையும், மூவகையான இயக்கங்களையும் நம்மால் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. பயிற்சியை மட்டும் அந்தந்த காலத்தில், அந்தந்த நேரத்தில் செய்து முடித்துவிட்டால், மற்ற செயல்பாடுகள் பயிற்சியின் விளைவாக அமைகின்றன. இத்தகைய சிறப்புமிக்க மனவளக்கலை பயிற்சியை நாள் தவறாமல் செய்து வாழ்வில் எல்லா வகையான வெற்றியும், மகிழ்ச்சியும், மன நிறைவும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment