வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 10
♦️🎲♦️🎲♦️🎲♦️🎲♦️🎲♦️
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ காற்று நெருப்பை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவச் செய்கிறது. வாசனை, வெப்பம், குளிர் இவை கடத்தியாகவும் காற்று செயல்படுகிறது. காற்றுக்கு என்று தனி உருவம் கிடையாது. அது தன்னை ஒரு கோன் போல வடிவமைத்துக் கொண்டு புயலாக வீசுகிறது, சுழன்று இயங்குகிறது. சிவ இனங்களுக்குள் ரத்தத்தோடு கலந்து ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. வெப்பஓட்டத்தை சீராக நடத்தவும் உதவுகிறது. தாவரங்களுக்குள்ளும் காற்று ஓடி அவற்றின் ஆற்றலையும் வளத்தையும் பெருகுகிறது. உலக உயிர்கள் அனைத்துக்கும் காற்று மூல சக்தியாக திகழ்கிறது. காற்றின் துணைகொண்டே நாம் நம்முடைய வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ முடிகிறது. காற்று எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ இந்த காற்றைப் போலவே பஞ்ச பூதங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தது. இந்த பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகவே மனித சரீரம் இருக்கிறது. இவைகளின் துணை கொண்டு நாம் நம்முடைய அன்றாட கடமைகளை செய்து வருகிறோம். நாம் பஞ்சபூதங்களை பயன்படுத்தி வாழ்கிறோம். இவைகளுக்கு ஒருபோதும் நாம் பங்கம் விளைவித்து விடக்கூடாது. பஞ்ச பூதங்களை அழித்துவிட்டு நாம் ஒரு நாளும், ஒரு நொடியும், ஒருபொழுதும் வாழ முடியாது. இந்த உண்மையை நன்றாக தற்சோதனை செய்து மண்வளத்தையும், மழை வளத்தையும், காற்றின் வளத்தையும் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அன்போடு வழங்க வேண்டும்.
♻️ இன்றைய பண்புப் பயிற்சி
♻️ இந்த பூமியும் இந்த பூமியினுடைய வளங்களும் நமக்கு மட்டும் சொந்தம் கிடையாது. நம்மைப் போன்று ஒவ்வொரு உயிர்களுக்கும் சொந்தம், அடுத்தடுத்த தலைமுறைக்கும் சொந்தம். இதனை மறந்து நாம் வாழ்வது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும். இந்த பாவ காரியத்திலிருந்து தன்னை காத்துக் கொள்ளும் பண்பில் உயர்வோமாக. இதை தெளிவாக புரிந்து கொண்டு அடுத்த தலைமுறையையும், இன்னொரு ஜீவனையும் துன்பப் படுத்தாமல் வாழும் வழிமுறையிலும் பண்பிலும் உயர்வோம். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment