வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 08
🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️🌸🛡️
📊 இன்றைய நித்தியக்கடன்
📊 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
📊 இன்றைய சாதகம்
📊 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
📊 இன்றைய நற்சிந்தனை
📊 சிவப்பு நிற சாயத்தையும், வெள்ளைநிற சாயத்தையும், ஒன்றாக கலந்தால் ரோஸ் கலர் கிடைக்கும். நீல நிற சாயத்தையும், மஞ்சள் நிற சாயத்தையும், ஒன்றாக கலந்தால் பச்சை நிறம் கிடைக்கும். இதுபோல பஞ்சபூதங்களில் நம் மனம் எதை நினைக்கிறதோ அதற்கு தக்கவாறு மனதிலும், காந்தத்திலும், தரமும், தன்மையும், நிறமும் மாறுகிறது. தொடர்பு கொள்ளும் பொருள், நோக்கம், இடம், காலம், திறமை இதற்கு தக்கவாறு மாறுதல்கள் முடிவாகிறது. உங்களை சரியான முறையில் உள்ளமர்த்திக் கொண்டு விரிவான இந்த இயற்கையின் இயக்க நீதியை பிழையின்றி புரிந்துகொண்டு பொருத்தமாக வாழ்வதற்கு முயலுங்கள்.
📊 இன்றைய தற்சோதனை
📊 எதை வேண்டுமானாலும் நமக்குள்ளாக நாம் வளர்த்துக் கொள்ள முடியும். திட்டமிட்டுக் கொண்டு அதற்குத் தகுந்த முறையில் செயல்களை செய்து சிறப்பாக உயரலாம். நன்மைகளை வளர்த்துக் கொண்டால், அது நமக்கும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையும் இதையே அருள் காப்பு என்று அருளாளர்கள் அன்போடு பெயரிட்டிருக்கிறார்கள். இதனை நன்றாக தற்சோதனை செய்து எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, என முடிவெடுத்து முடிவில் நின்று முயற்சிப்போம்.
📊 இன்றைய பண்புப் பயிற்சி
📊 உயிருக்கு உகந்த பண்பு இந்த பணியிலேயே நம் வாழ்வை வாழ வேண்டும். உயிருக்கு பொருத்தமில்லாத செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் இருந்து தயவுசெய்து வெளியே வாருங்கள். தன்னைத்தானே துன்பப்படுத்திக் கொள்ளும் போதும், பிறரை துன்பப்படுத்தும் போதும், நீங்கள் உயிருக்கு விரோதமான காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். தான் துன்பப்படாமல் பிறரை துன்பப்படுதாமளும் வாழும் பண்பில் உயர்வோம்.வாழ்க வளமுடன்...
📊 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
📊 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment