வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 06
🍀♾️🍀♾️🍀♾️🍀♾️🍀♾️🍀
🕳️ இன்றைய நித்தியக்கடன்
🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕳️ இன்றைய சாதகம்
🕳️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🕳️ இன்றைய நற்சிந்தனை
🕳️ இந்த பூமிக்கு அடியில் இருக்கக்கூடிய தன்மை, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக முயற்சி செய்தபோது பூமியின் மீது பல்வேறு வகையான தாவர இனம் உருவானது. இப்பூமிக்குள் உள்ளடங்கியிருந்த ஆற்றல் வெளிப்பட்டபோது, ஏற்பட்ட முதல்அறிவு தாவர இனமாக உருவானது. தன்னை தொடுகிறார்கள் என்ற தொடு உணர்வு அறிவோடு இயங்கும்.(எ-கா)தொட்டால் சிணுங்கி
🕳️ இன்றைய தற்சோதனை
🕳️ சூரிய வெப்பத்தை, காற்றை, இப்பூமி நிலப்பரப்பில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்திக் கொண்டு தாவர இனம் முளைத்தது. இதுபோன்று நாம் கற்ற கல்வியறிவு, தொழிலறிவு, இயற்கை தத்துவஅறிவு, ஒழுக பழக்கஅறிவு இவைகளை பயன்படுத்திக் கொண்டு, இவ்வுலகிற்கு நம்மை நல்ல சிறந்த மனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்வோம். எல்லா வகையிலும் தற்சோதனை செய்து இதில் வெற்றி காண்போம்.
🕳️ இன்றைய பண்புப் பயிற்சி
🕳️ எல்லாவற்றுக்குள்ளும் இருந்து இயங்கும் இயற்கை எனும் பேராற்றல். அது தன்னை எல்லா நிலைகளிலும் அறிவாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அனைத்து நிலை அறிவோடும் நம்மை முழுமையாக இணைத்துக் கொண்டு நமது அறிவில் முழுமை பெறும் பண்பில் சிறந்து விளங்க வேண்டும். இதற்கான செயல் பண்புகளில் மட்டும் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🕳️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕳️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும் மேலும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment